திங்கள், 19 பிப்ரவரி, 2018

கடலை

கடலை வறுத்தவனுக்கு கிடைக்காத ஆனந்தம்,

கடலை போடுறவனுக்கு கிடைக்கிறது..!!

புதன், 11 அக்டோபர், 2017

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 93

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 93

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 93

1. அந்த கட்சியோட மேடைப் பேச்சாளர் எதுக்கு திடீர்னு தனக்கு கட்சியிலே பொறுப்பு வேணும்னு கேட்டு அடம்பிடிக்கிறாரு!

   “பொறுப்பில்லாம பேசறாரு”!ன்னு யாரும் விமர்சனம் பண்ணிடக் கூடாதாம்!

2.  பையன் கமல் ரசிகன்!
    இருக்கட்டும்! அதுக்காக இந்த வாரம் வீட்டுல இருந்து யாரு எலிமினேட் ஆகனும்னு ஒரு நாமினேஷன் வைச்சிக்கலாம்னு சொல்றது கொஞ்சம் கூட நல்லா இல்லை!


3.  .  மந்திரியாரே! அரண்மனை மேன்மாடத்தில் நிறைய புறாக்கள் கூட்டமாக உள்ளதே என்ன விஷயம்?

  ஆட்சியின்  அவலங்களை புறாத் தூது மூலமாக மக்கள் அனுப்பி உள்ளார்கள் மன்னா!


 4. பிக் பாஸ் நிகழ்ச்சியிலே கலந்துக்க வந்த வாய்ப்பை நம்ம தலைவர் மறுத்துட்டாராமே ஏன்?

   அங்கேயும் “ஓட்டு” வாங்கணும்னு சொன்னாங்களாம்!


5  ஜெயிலுக்கு போன தலைவரை மீட் பண்ண போனியே என்ன ஆச்சு!

   ஷாப்பிங் போயிருக்காரு! பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க!


6.  பேச்சாளர்:   எங்கள் கட்சி தலைவர் “சமரசத்துக்கு” தயார் என்று அறிவித்த வேலையில் தக்காளி விலையை ஏற்றி சதி செய்த எதிர் கட்சியினரை வன்மையாக கண்டிக்கிறேன்!

7,  தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பா போயிருச்சு!

      ஏன்?
அடிக்கடி கட்சிக்கு “ஆபரேஷன்” பண்ணிடுவேன்னு சொல்லி அறிக்கை விட்டுகிட்டு இருக்காரே!


8 . நம்ம தலைவர் எப்பவுமே சொத்து சேர்க்கிறதுலேயே ஆர்வமா இருக்கார்னு எப்படி சொல்றே?
  புதிய இந்தியாவை உருவாக்குவோம்னு சொன்ன உடனேயே அதுல நல்லதா நாலு இடங்களை நம்ம பேருக்கு புக் பண்ணிடனும் சொல்றாரே!

9.  உறவுக்கு பாலம் அமைப்போம்னு தலைவர் கிட்டே சொன்னவங்க நொந்து போயிட்டாங்களா ஏன்?
   அந்த பாலம் கட்டற காண்ட்ராக்டை எனக்கே கொடுத்துருங்கன்னு கேட்டு இருக்கார்!

10. அந்த கிளினிக் போலி கிளினிக்னு எப்படி சொல்றே?
      இவ்விடம்  “அக்குப் பஞ்சர்” போடப்படும்னு போர்டு வைச்சிருக்காங்களே!

11.  என்ன சொல்கிறீர் மந்திரியாரே? எதிரி மன்னன் வைரஸ் தாக்குதல் நடத்துகிறானா?
   ஆம் மன்னா! அவன் அனுப்பிய தூதுப்புறாக்களுக்கு பறவைக்காய்ச்சல் வந்துள்ளது!

12.  மன்னருக்கு  திடீரென்று  ஓவிய ஆசை வந்துவிட்டது போலிருக்கிறது! தூக்கத்தில் கூட “ஓவியத்தை காப்பற்றனும் என்று உளறுகிறார்!
     பாழாப் போச்சு! அது ஓவிய ஆர்வம் இல்லை! ஓவியா ஆர்வம்!

13. எதிரி கூப்பிடு தூரத்தில் இருக்கிறான் மன்னா!
       எந்திரித்து “ கும்பிடு!”  போட்டு விட வேண்டியதான் மந்திரியாரே!

14.  மாப்பிள்ளை பொண்ணை வேண்டாம்னு சொல்லிட்டு ஓடறாரே ஏன்?
         பொண்ணு “ஓவியம்” மாதிரி இருக்கும்னு சொல்லிட்டாங்களாம்!

15. டி.டி. ஆர் வீட்டுல பொண்ணு பார்க்க போனது தப்பா போயிருச்சா ஏன்?
     உள்ளே நுழைஞ்சதுமே “ஆதார் கார்டு” இருக்கான்னு கேக்க ஆரம்பிச்சிட்டாரே!

16.  பையன் பி. இ முடிச்சிருக்கான்!
    வேலை இல்லாம வீட்டுல வெட்டியா இருக்கான்னு சொல்லுங்க!

17. அந்த ஜோஸ்யர் “ட்ரெண்டியான ஆளு”ன்னு எப்படி சொல்றே?
    உங்களுக்கு கொஞ்ச நாள்ள “ரிசார்ட்ஸ் யோகம்” அடிக்கப் போவுதுன்னு சொல்றாரே!

18. இந்த வாரம் என்னை வைத்து ஒரு மீம்ஸ் கூட போடாததில் எதிர்கட்சிகளின் சதி இருக்கிறது ! அதற்காக அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்!

19.  பாட்டுப் பாடிய புலவருக்கு இன்னும் பரிசில் வழங்க வில்லையாமே மன்னா!
  அவர் இன்னும் ஆதார் கார்டு, பான் கார்டு, அக்கவுண்ட் விவரங்களை சப்மிட்
பண்ண வில்லையே மந்திரியாரே!

 20. தலைவருக்கு சோஷியல் நெட் வொர்க்ஸ்லே பாப்புலாரிட்டி அதிகம்!
     அங்க நல்ல நேம்ஸ் வாங்கியிருக்காருன்னு சொல்லு!
   ஊகும்  நிறைய மீம்ஸ் வாங்கியிருக்காரு!



Thursday, August 3, 2017

” பஞ்ச்”சர் பாபு - பகுதி 1

இந்து தமிழ் நாளிதழில் பஞ்சோந்தி பராக் என்றொரு பகுதி வருகிறது! அதற்கு நானும் சில பஞ்ச்கள் அனுப்பி பிரசுரம் ஆகியிருக்கிறது. பிரசுரம் ஆகாத பஞ்ச்கள் நிறைய இருக்கிறது! 
   அந்த பஞ்ச்களை அவ்வப்போது இப்பகுதியில் வெளியிட உத்தேசம்! உங்கள் ஆதரவை பொறுத்து இந்த பகுதி தொடரும்.

இந்த வார “ பஞ்ச்’ சர் பாபு !

செய்தி: 
பெங்களூர் சிறையில் கன்னடம் கற்கிறார் சசிகலா: டிஐஜி ரூபா தகவல்

பஞ்ச்:  தோழியை ஆட்டுவிச்சது முடிஞ்சிருச்சு! இனி மொழியை ஆட்டுவிக்க போறாங்களோ?


செய்தி: நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் நாடகம் ஆடுகின்றன - விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்..

பஞ்ச்: “நாடகத்துலே உங்க “ரோல்” என்னன்னு சொல்லவே இல்லையே தலைவரே!


செய்தி: ஏழு வயதில் இருந்தே பொது வாழ்வில் இருப்பவன் நான்- எச்.ராஜா

பஞ்ச்: அப்பவே வீட்டுல “தண்ணி” தெளிச்சி விட்டுட்டாங்களா?

பஞ்ச்: தமிழக மக்களோட ஊழ்வினைதான் காரணம்!


செய்தி: சசிகலா - ரூபா மோதல் திரைப்படமாகிறது - 'குப்பி' ரமேஷ் இயக்குகிறார்

பஞ்ச்: படத்துல “பஞ்ச்” டயலாக் எல்லாம் இருக்குமா?

செய்தி: ஏரி குளங்களோடு தமிழகத்தையும் தூர்வாரவேண்டும்! மு-க.ஸ்டாலின்

பஞ்ச்: அப்புறம் நீங்க எங்க போவீங்க தளபதி?

செய்தி: 
ஒருங்கிணைந்த வளர்ச்சியே கலாமுக்கும்,ஜெயலலிதாவுக்குமான உண்மையான அஞ்சலி: பிரதமர் மோடி உரை!

பஞ்ச்:  அதான் அதிமுக வை ஒருங்கிணைத்து வளர்க்கிறப்பவே தெரிஞ்சுடுச்சு ஜி!

செய்தி: 
ஊழலுக்கு எதிரானவன்; எந்தவொரு கட்சிக்கும் எதிரானவன் அல்ல: விமர்சனங்களுக்கு கமல் பதிலடி

பஞ்ச்: அதான் பாஸ் எல்லோரும் பயப்படறதுக்கு காரணமே!

செய்தி:  ஜெ. இல்லாத வருத்தத்தை உணர்கிறேன்!  மோடி.


பஞ்ச்:   இதைச் சொல்றப்ப  மெல்லீசா ஒரு  “சந்தோஷம்”  தெரியுதே ஜி!

செய்தி: தமிழகத்தின் நீட் மசோதா எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை: நிர்மலா சீதாராமன்

பஞ்ச்:  தமிழகத்துல “வோட்” எங்கிருக்குன்னு மட்டும் உங்க கண்ணுக்கு தெரியுதா மேடம்?


செய்தி: நீட் விவகாரத்தில் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம்!  எடப்பாடி பழனிச்சாமி- தமிழக முதல்வர்.

பஞ்ச்:  “ ஆனா “விசில்” அடிக்கிறா மாதிரி தகவல் ஒண்ணும் அங்கிருந்து வரமாட்டேங்குதே!

செய்தி: ரயில்வே வழங்கும் உணவு மனிதர்கள் சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல : சிஏஜி அறிக்கை

பஞ்ச்:  அப்ப ரயில்ல பயணிக்கிறவங்களை ரயில்வே மனுஷனாவே மதிக்கிறது இல்ல போலிருக்கே!


செய்தி: 

கமலின் அறிக்கை எதிரொலி: காணாமல் போன அமைச்சா்களின் இணையதள முகவரிகள்


பஞ்ச்:  கூடிய சீக்கிரம் அமைச்சர்களும் காணாம போயிருவாங்களோ?

பஞ்ச் 2  ‘ஈ” மெயிலுங்கறதால விரட்டி அடிச்சிருப்பாங்களோ?


செய்தி: 
கர்நாடகம், புதுவையில் காங்கிரஸ் ஆட்சி நடப்பது மத்திய பாஜக அரசின் கண்ணை உறுத்துகிறது : முதல்வர் நாராயணசாமி

பஞ்ச்:  ஒரு வேளை  தாமர”ஐ” நோயா இருக்குமோ?


செய்தி: 

கமல், ஓ.பி.எஸ்., ஸ்டாலின் கூட்டு : அமைச்சர் ஜெயக்குமார்


பஞ்ச்: அவங்க கூட்டு வைக்கிறது இருக்கட்டும் உங்களுக்காக “தாமரை” ”பொரியறாங்களே” ஏன்?


இவை போன மாதம் 21ம் தேதியில் இருந்து அவ்வப்போது இந்துவுக்கு அனுப்ப பட்ட பஞ்ச்கள்! பிரசுரம் ஆகவில்லை!  

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு! எனவே  இங்கு பிரசுரம் செய்து அழகு பார்க்கிறேன்!

உங்களின் பொன்னான கருத்துக்களை தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!


தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி! 


Thursday, July 20, 2017

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 92

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 92

1.   எங்க தலைவரை அவ்வளவு சீக்கிரத்துல யாரும் விலை கொடுத்து வாங்கிட முடியாது!
  அதுக்காக “ தமிழகத்தின் தக்காளியே!”ன்னு பேனர் வைக்கிறது எல்லாம் ரொம்ப ஓவர்!

2.   தலைவர் தீர்த்த யாத்திரைக்கு போயிருக்கார்னு சொல்றீங்களே ஏதாவது வேண்டுதலா?
நீ வேற ‘சரக்கு அடிக்க போயிருக்கிறதை”த்தான் அப்படி சொன்னேன்!


3.   நம்ம பால்காரனுக்கு வாய்கொழுப்பு ஜாஸ்தியா ஆயிருச்சு!!
ஏன் என்ன ஆச்சு?
பால்ல ஏன் தண்ணி கலக்கறேன்னு கேட்டா, நான் என்ன ரசாயணமா கலக்கறேன் தண்ணிதானேன்னு நக்கலா பதில் சொல்றான்!

4.   படத்தோட கதை நடக்கிற இடம் மும்பை, கேரளாவில் இருந்து ஹீரோயினையும் ஆந்திராவில் இருந்து வில்லனையும் இறக்குமதி பண்றோம். பாரின்ல நாலு சாங் எடுக்கிறோம்!
  சிறந்த தமிழ்ப்படமா தேர்வாகும்னு சொல்லு!

5.   எதிரி படை திரட்டி வருகிறான் மன்னா!
  நடையை வீசிப் போட்டு பழகலாமா மந்திரியாரே!


6.   எதிரி கமல் ரசிகனாய் இருப்பான் போலிருக்கிறது மன்னா!
   எப்படி சொல்கிறீர்கள் மந்திரியாரே!
நம் அனைவரையும் ஒரே சிறையில் அடைத்து வைத்து இருக்கிறானே!

7.   கல்யாணத்துக்கு முன்னாலே அந்த ப்ளேயர் வாழ்க்கையிலே நிறைய செஞ்சுரிஸ்!
  அப்புறம்!
கல்யாணத்துக்கு அப்புறம் நிறைய “இன் ஜுரிஸ்”

8.   மன்னா! புகழ்ந்து பாடியதற்கு இன்னும் பரிசில் தரவில்லையே மன்னா!
முதலில் உங்கள் ஆதார் கார்டை பான் கார்டோடு இணையுங்கள் புலவரே!

9.   ஜி.எஸ்.டி. ஜி.எஸ்.டி என்கிறார்களே அது என்னது மன்னா?
  அது நீர் இயற்றும் பாடல் போன்றது! ஒன்றுமே புரியாது புலவரே!


10. சிறைச்சாலையையே வீடாக நினைத்து தவ வாழ்க்கை வாழ்ந்த தலைவர் மேல் அபாண்டமாக சொகுசாக வாழ்ந்தார் என்று பழி கூறுவதை வன்மையாக கண்டிக்கிறேன்!

11. தலைவர் விஞ்ஞான ரீதியா ஊழல் பண்ணியிருக்காரா எப்படி?

கட்சியை இணைக்க வை-ஃபை இணைப்பு கொடுத்த செலவுன்னு கணக்கு காட்டியிருக்காராம்!

12. உன் பையன் சதா எதையோ தேடிக்கிட்டே இருக்கான்னு சொல்லுவியே இப்ப எப்படி இருக்கான்!
  கூகுள்”ல வேலைக்கு சேர்ந்துட்டான்!

13. அவர் வாழ்க்கையிலே ஸ்டெப் பை ஸ்டெப்பா முன்னுக்கு வந்தவர்!
  அப்படியா என்ன வேலை செய்யறார்?
கணக்கு வாத்தியாரா இருக்கார்!

14. முதல் முறையாக கன்னிமாடத்திற்குள் யாரோ ஆடவர்கள் புகுந்துவிட்டார்களாமே!
“கன்னி” முயற்சி என்று சொல்லுங்கள்!

15. தலைவர் ஏன் அந்த நடிகையை கட்சிக்குள்ளே சேர்க்கணும்னு ஆர்வமா இருக்கிறார்?
அவங்களுக்குத்தான் இப்ப நிறைய “ஓட்டு” விழுதாமே!


Friday, January 13, 2017

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 91

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 91


1.   மாப்பிள்ளையோட ஃப்ரெண்ட் சதா பொண்ணோட தோழியை சைட் அடிச்சிக்கிட்டே இருக்காரே… என்ன விஷயம்?
அவர் தோழி மாப்பிள்ளையாச்சே!

2.   தலைவர் பொங்கல் இனாம் கொடுக்கிறேன்னு சொன்னாரேன்னு போனது தப்பா போயிருச்சு!
   ஏன் என்ன ஆச்சு?
பழைய ஐந்நூறு ரூபாயை கொடுத்து அனுப்பிச்சிட்டாரு!

3.   அந்த ஏ.டி.எம் லே எப்பவும் கூட்டமே இருக்காது!
ஆச்சர்யமா இருக்கே?
இதுல என்ன ஆச்சர்யம்? அது எப்பவும் பூட்டித்தானே கிடக்குது!

4.   அவர் தீவிர விஜய் ரசிகர்,,,!
அதுக்காக மளிகைக் கடையில வந்து எனக்கு ‘பை’ரவா! தான் வேணும்னு அடம்பிடிக்கிறது கொஞ்சம் கூட நல்லா இல்லை!

5.   நிறைய கிரெடிட் கார்டை வச்சிக்கிட்டு தேய்ச்சு தேய்ச்சு பொருளுங்க வாங்கிட்டு இருந்தார் அவர்!
அப்புறம்? நிறைய ஓவர் ட்ராப்ட் ஆகிருச்சுன்னு ஒருநாள் எல்லாரும் அவரை துவைச்சு எடுத்திட்டாங்க!


6.   எதிரியைக் கண்டதும் மன்னர் வில்லை…!
பூட்டிவிட்டாரா?
ஊகும்! போட்டுவிட்டு சரணாகதி அடைந்துவிட்டார்!

7.   யார் அங்கே??
எல்லோரும் ஏ.டி.எம் க்யுவில் நிற்க போய்விட்டார்கள் மன்னா!

8.   உங்களுக்கு ஒரு பொண்ணு பையன்னு சொன்னீங்களே பையன் என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்?
தற்சமயம் ஏ.டி.எம் க்யுவில நின்னு பணம் எடுக்க ட்ரைப் பண்ணிகிட்டு இருக்கான்!

9.   ஆனாலும் கேடி கபாலிக்கு இவ்வளவு திமிர் இருக்க கூடாது,,,!
  ஏன் என்ன சொல்றான்!
மாமூல் வாங்கிங்க கார்டு அக்செப்ட் பண்ணிக்குவீங்களா சார்னு  கேக்கறான்!


10.  மன்னா! கலி முற்றிவிட்டது!
என்ன ஆயிற்று மந்திரியாரே!
எதிரி நமக்கு கப்பம் கட்ட சம்மதித்துவிட்டான்!

11. அந்த போஸ்ட் மேனுக்கு ரொம்பவும் நக்கல் அதிகமா போச்சு!
ஏன்?
ஜோக்ஸ் எழுதி போஸ்ட் பண்ண போனா உங்க வீட்டு குப்பையெல்லாம் எதுக்கு இங்க வந்து கொட்டறீங்க சார்னு கேக்கறான்!


12.  பொங்கல் வாழ்த்து சொன்ன தலைவர் ஜெயில்ல இருக்கிறார்னு எப்படி சொல்றே?
பொங்கல் வாழ்த்துக்களை சொல்லிக்கொள்வதில் “களி”ப்படைகிறேன்னு அறிக்கை விட்டிருக்காரே!

13.  மன்னா! வீரர்களும் ஊழியர்களும் பொங்கல் பரிசு கேட்டு வந்திருக்கிறார்கள்!
நாளை ஒருநாள் எல்லா ஏடி.எம் களிலும் பணம் வைத்துவிடுவதாக அறிவித்து விடுங்கள்!

14. கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத பொங்கலா போயிருச்சு இந்த வருஷம்!
போனஸ் கிடைச்சும் ஏ,டி.எம் லே பணம் எடுக்க முடியாம போயிருச்சே!

15. அது அரசியல் வாதி வீட்டு குழந்தைன்னு எப்படி சொல்றீங்க?
அம்மாவோட தோழியை “சின்னம்மா”ன்னு கூப்பிடுதே!

16. எதிரியை பார்த்ததும் மன்னர் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார்!
அப்போ அது அறைக்”கேவல்”னு சொல்லு!


17. என்ன திடீர்னு வீட்டு வாடகையை ஆயிரம் ரூபா ஏத்தி இருக்கறீங்க?
வீட்டு பக்கத்துல இருக்கிற ஏ.டி.எம்ல எப்பவும் பணம் இருந்துட்டே இருக்கே!

18. தலைவருக்கு ஆங்கில அறிவு கம்மின்னு எப்படி சொல்றே?
சுகர்கேன் வழங்கறாங்கன்னு சொன்னா ஏன் கேன்ல தர்றாங்க பை ஸ்டாக் இல்லையான்னு கேக்கறாரே!

19.  பொண்ணுக்கு வாட்சப், பேஸ்புக், டிவிட்டர்னு எந்த பழக்கமும் இல்லே!
ரொம்ப பழமையான வளர்ப்புன்னு சொல்லுங்க!

20. உங்களை ஒரே நாளில் வென்றுவிடுவேன் என்று எதிரி தம்பட்டம் அடித்துக் கொள்கிறான் மன்னா!
  “ஒரு நாள் ஆகுமாமா? அவ்ளோ ஸ்ட்ராங்கா நான்!

வாசகர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய போகி, பொங்கல் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



Friday, January 6, 2017

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 90

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 90

 

1.   என்னது?மன்னருக்கு அவை’நடுக்கம்” அதிகமா? என்ன சொல்கிறீர்கள் மந்திரியாரே?
நன்றாக கவனியும் ராணியார் அருகில் இருக்கையில் அவர் கால்கள் உதறிக்கொண்டிருப்பதை கவனியும் தளபதியாரே!

2.   கூட்டணியில இருந்து தலைவர் திடீர்னு தலைவர் விலகிட்டாரே ஏன் ?
கூட்டணிக்காக “உடைச்சவரைக்கும்” போதும்னு சொல்லி அனுப்பிட்டாங்களாம்!
 
3.   கட்சியிலே ஒரு நியு எண்ட்ரிக்குத்தான் நாங்க பொதுச்செயலர் பதவி கொடுத்து இருக்கோம்!
அப்ப அவர் “புதுச்செயலர்”னு சொல்லு!

4.   மன்னா மக்கள் எதிரிக்கு விலை போய் விட்டார்கள்?
எப்படி?
நம் ஏ.டி.எம்களில் எதிரி அவனது பணத்தை நிரப்பி விட்டான் மன்னா!

5.   அந்த கோயில்ல குருக்கள் ட்ரெண்டியா இருக்காரு!
எப்படி சொல்றே?
காணிக்கை வாங்கிறதுக்கு ஸ்வைப்பிங் மிஷினோட இருக்காரே!

6.   மன்னரின் உடை வாளை எவனோ திருடி விட்டானாம்!
யார் அந்த கூறு கெட்டப் பயல்?

7.   தலைவர் எதுக்கு தொண்டர்களை துடுப்புகளோடு படையெடுத்து வாங்கன்னு அறிக்கை விட்டிருக்கார்!
கட்சியை கரை சேர்க்காம விடமாட்டாராம்!
 
8.   எதிரி வர்தாவாய் வந்து கொண்டிருக்கிறானாம் மன்னா!
நாம் “நடா” வாய் காணாமல் போய்விடுவோமா மந்திரியாரே!

9.   ஜல்லிக்கட்டுக்கு ஆதரவா பேசிக்கிட்டிருந்த தலைவர் இப்ப வாயே திறக்க மாட்டேங்கிறாரே!
இப்பவெல்லாம்  தினமும் கட்சிக்காரங்களோட மல்லுக்கட்டவே நேரம் பத்தலையாம்!

10.  நீங்கள் புறாக்களை சமைத்து சாப்பிடும் விஷயம் எதிரிக்கு தெரிந்துவிட்டது போலிருக்கிறது மன்னா!
எப்படி?
புறாவுக்கு பதிலாக கோழியின் காலில் செய்தி கட்டி அனுப்பி இருக்கிறானே!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



Thursday, December 8, 2016

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 89

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 89


1.   சிறைக்கு போன தலைவர் பெயில் வாங்க வேண்டாம்னு சொல்லிட்டாராமே?
  ஆமாம்! அவர் இதுவரைக்கும் எதுலேயும் ஃபெயில் ஆனதில்லையாம் இப்பவும் ஆக மாட்டாராம்!

2.   துக்க வீட்டுக்குப் போன தலைவர் வாயே திறக்கலையாமே ஏன்?
“துக்கம் தொண்டையை அடைச்சிருச்சாம்!”

3.   பேங்க்ல வேலை செய்யறவங்க வீட்டுக்கு பொண்ணு பார்க்க போனது தப்பாயிருச்சு!
மாப்பிள்ளை ஐம்பதாயிரத்துக்கு மேல சம்பாதிக்கிறார்னு சொன்னதுக்கு அப்ப பான் கார்டை காட்டுங்கன்னு சொல்லிட்டாங்க!

4.   அவர் குழந்தை பத்திரிக்கைகளுக்கு எழுதற எழுத்தாளராம்!
  அதுக்காக சன்மானத்துக்கு பதில் சாக்லேட் கேக்கறதெல்லாம் ரொம்ப அதிகமா இருக்குது!


5.   கண்ணுக்கெட்டுகிற தூரம் வரை எதிரிகளே இருக்க கூடாது மந்திரியாரே!
உங்கள் புண்ணுக்கு எட்டுகிற தூரத்தில் இருந்தால் பரவாயில்லையா மன்னா?

6.    புலவர் மேல் மன்னர் ஏன் கோபமாய் இருக்கிறார்?
போர்க்களம் சென்று திரும்பிய மன்னரை “புண்”ணிய யாத்திரை சென்று வந்தவா வாழி!ண்ணு பாடிட்டாராம்!

7.   என் பையன் ஆயிரம் ஆயிரமா சம்பாதிக்கிறான்….!
  அப்ப மாத்தறதுக்கு ரொம்ப சிரமப்படறான்னு சொல்லுங்க!


8.   ராணியார் சேடிப்பெண்களுக்கு “உடைக் கட்டுப்பாடு” விதித்துவிட்டார்களாமே?
இல்லாவிட்டால் மன்னரின் கண்கள் கட்டவிழ்த்துக் கொண்டு பாய்கிறதாம்!

9.   அந்த மளிகை கடையில என்ன கலாட்டா?
அக்கவுண்ட்ல பணம் எடுக்கலாம்னு சொன்னாங்களே என் அக்கவுண்ட்ல எழுதிக்கிட்டு பணம் கொடுங்கன்னு ஒரு கஸ்டமர் கலாட்டா பண்ணிக்கிட்டிருக்காராம்!

10. தன்னை நிலை நிறுத்திக்க தலைவர் ரொம்பவும் சிரமப்படறாராமே!
ஆமாம்! எப்பவும் அவரை தூக்கி நிறுத்த ரெண்டு பேரை கூடவே வைச்சிருக்கார்!

11.  நம்ம தலைவர்  எமகாதகப் பேர்வழியா இருக்கார்!
   எப்படி?
 எவ்வளவோ வற்புறுத்தியும் “அப்பல்லோவில” அட்மிட் ஆகமாட்டேன்னு சொல்லி தப்பிச்சிட்டாரே!

12. கல்யாண வீட்டுக்காரங்க ஏன் இவ்ளோ சோகமா இருக்காங்க?
வந்த மொய்ப்பணம் எல்லாம் ஆயிரமும் ஐநூறாவுமா இருக்குதாம்!


13.  நம்ம தலைவர் குழந்தை மாதிரி…!
அதுக்காக மேடையிலே குடிக்கிறதுக்கு கிரைப் வாட்டர் கேக்கறது கொஞ்சம் கூட நல்லா இல்லை!

14. அந்த கெஸ்ட் ஹவுஸ்ல நிறைய பேய்ங்க நடமாட்டம் இருக்குதாம்!
அப்ப அது “கோஸ்ட் ஹவுஸ்”னு சொல்லு!

15. அவர் ஜியோ சிம் யூசர்னு எப்படி சொல்றே?
அன் லிமிடெட்டா சாப்பிட்டுகிட்டு இருக்காரே!


16. ஒண்ணுத்துக்கும் கவலைப்படாதீங்க! நான் இருக்கேன்! நான் பாத்துக்கிறேன்!
நீங்க இருப்பீங்க! அது தெரியும்! ஆனா ஆபரேஷனுக்கு பின்னாடி நான் இருப்பேனா டாக்டர்?


17.  உன் பொண்ணு கல்யாணம் “ஆன்லைன்” ட்ரான்ஸாக்‌ஷனலே நடந்ததுன்னு சொல்றியே நெட்டிலேயா?
ஏ.டி.எம் க்யுவிலே பொண்ணும் பையனும் பார்த்து லவ் பண்ணி கட்டிகிட்டாங்க!

18. மன்னா! புலவர்கள் பரிசில் கேட்டு வாசலில் நிற்கிறார்கள்!
  பேங்கிற்கு போய்வந்து தருகிறேன் என்று சொல்லி அனுப்பிவிடுங்கள் மந்திரியாரே!

19. தலைவர் எதுக்கு திடீர்னு மலைக்கு அரோகரா போடனும்னு கேக்கறார்?
நீ வேற அது மலைக்கா அரோரா! அவங்க படத்தை பார்க்கணுமாம்!


20. ரெண்டு மூனு கன்னிப்பசங்களோட சிரிச்சு பேசிகிட்டு இருக்கறதை என் வொய்ஃப் பாத்துட்டா?
அப்புறம்?
கன்னிப்பேச்சால என் கன்னம் “கண்ணி”போயிருச்சு!

21. எதிரி எதற்கு கப்பம் கட்டியபின்னும் படையெடுத்து வருகிறான் மந்திரியாரே!
  நீங்கள் கட்டிய நோட்டெல்லாம் பழைய ஆயிரம் ஐந்நூறு ரூபாய் நோட்டுக்கள் ஆச்சே மன்னா!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!