ஞாயிறு, 25 நவம்பர், 2012

ஒரு 18+ ஜோக்!



ஒரு கடைக்கு ஒரு இளைஞன் வந்தான்.ஒரு ஆணுறை வாங்கினான்.பின் பெரிதாகச் சிரித்துக் கொண்டே சென்று விட்டான்.

மறுநாளும் அவன் வந்தான்.முதல்நாள் போலவே ஒரு ஆணுறை வாங்கினான்.மீண்டும் பெரிதாகச் சிரித்துக்  கொண்டே சென்று விட்டான்.

கடைக்காரருக்கு,இது விநோதமாகத் தோன்றியது;ஏன் அப்படிச் செய்கிறான் என அறிய ஆர்வம் பிறந்தது.

மறு நாளும் அவன் வந்தான் .முன்தினம் போலவே எல்லாம் நடந்தது.

அவன் சென்றவுடன் கடைக்காரர், தன் உதவியாளனை அழைத்து அவன் எங்கு செல்கிறான் என்று பார்த்து வரச் சொல்லி அனுப்பினார்.

போன உதவியாளன் சிறிது நேரம் கழித்துத் திரும்பினான்.

கடைக்காரர் அவன் எங்கே போனான் என ஆர்வத்துடன் வினவினார்.

அவன் சொன்னான்”உங்க வீட்டுக்குத்தான்!”

!!!!!!!!!!!!!!!!!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக