புதன், 13 பிப்ரவரி, 2013

சும்மா எட்டிப்பாருங்க சார் இது உங்க வீட்டு சமாச்சாரம் தான்


சும்மா எட்டிப்பாருங்க சார் இது உங்க வீட்டு சமாச்சாரம் தான்



கல்யாணமாகிற வரைக்கும் சுதந்திரமா, எந்த கவலையும் இல்லாம பாக்கிற பொண்ணுகள எல்லாம் டாவடிச்சு கிட்டு நான் வீரன், சூரன், ஒரு யானை வந்தாலும் தனியா சமாளிப்பேன் அப்படீன்னு உதார் விட்டுகிட்டு இருக்கிற நம்ம ஆம்பள சிங்கங்களோட உலகமே மாறிப்போகுமுங்க....

....கல்யாணம் ஆனதும் ......

......இதோ இப்படி தான்......
வாங்க வந்து நம்ம சிங்கங்கள் கஷ்டப்படுறத பாருங்க..



நேத்து பொண்டாட்டி மேல வந்த கோவத்தில என்ன சார் செஞ்சீங்க.?

சாம்பார்ல உப்பை இஷ்டத்துக்கு அள்ளி போட்டுட்டேன்..

..............................................




சார் உங்க கேரியர்ல மறக்க முடியாதது எது ?

நேத்து என் பொண்டாட்டி கொடுத்தனுப்பிய பழைய சாதமும், பச்சை மிளகாவும்...

..............................................




இன்னைக்கு வீட்டில பயங்கரமா சத்தம் போட்டீங்களே யாரங்க?

என்னோட பொண்டாட்டிய தான்..

அவங்க தான் ஊர்ல இல்ல போலிருக்கே..

அந்த தைரியத்தில தான் திட்டினேன்..

..............................................






அப்பா இன்னைக்கு எங்க பள்ளில ஒரு மாஜிசியின் ஐந்து ரூபா நோட்டை ரொட்டியா மாத்திட்டாருபா..

ப்பூ.. இதென்ன பிரமாதம் உங்கம்மா கிட்டே ஐநூறு ரூபா கொடுத்த அஞ்சு நிமிசத்தில சேலையா மாத்தி காமிச்ச்ருவா...

..............................................



டார்லிங் உனக்கு என்னை பிடிச்சிருக்கா..?

எனக்கு பிடிக்காதது எதையும் நான் விலை கொடுத்து வாங்குறதில்லைங்க..

..............................................


உங்க புடவை வெள்ளை வேளேர்ன்னு பள பளக்க என்ன உபயோகிக்றீங்க ..

என்னோட கணவரை தான்..


..............................................


இதப்பாருங்க இனிமேல் நாம ஒருத்தருக்கொருத்தர் உதவியா இருக்கணும்.. நாளையிலேர்ந்து உங்க கர்ச்சீப்பை நான் துவச்சு மடிச்சு வைக்கிறேன்.. நீங்க என்னோட துணி மணிகளை துவச்சு அயர்ன் பண்ணி வைக்கணும் சரியா...


ஹெலோ ஹெலோ ... எதுக்கு இப்போ இப்படி முறைக்கிறீங்க .. சில சமயம் உண்மைகள வெளிய சொன்ன கொஞ்சம கஷ்டமா தான் இருக்கும். இதுக்கெல்லாம் போய் கோவிச்சுக்கிட்டு..
விடுங்க பாஸ் இது எல்லார் வீட்டிலேயும் நடிக்கிறது தான்.. பாருங்க உங்களுக்கு முன்னாடி வந்தவங்க எவ்வளவு நாகரீகமா கருத்துகளை சொல்லிட்டு போறாங்க..
நீங்க என்ன பண்ண போறீங்க..

பெட்ரோல் போராட்டமும் அதற்கான தீர்வுகளும்...



செய்தி:

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாரதிய ஜனதா, இடதுசாரி கட்சிகள் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெறாத கட்சிகள் சார்பில், நேற்று, "பாரத் பந்த்' அறிவிக்கப்பட்டது.இந்த, "பந்த்'தால் நாட்டின் பல பகுதிகளில் நேற்று மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.



ஒரு சராசரி இந்தியனாக எனது பார்வை ...

எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் கடைசியில் பாதிக்கப்படுவது என்னவோ, ஒவ்வொரு மாதமும் இவ்வளவு தான் செலவு என்று பட்ஜெட் போட்டு வாழும் நடுத்தர மக்களும், அன்றைய தேவைகளை மட்டுமே பூர்த்தியானால் போதும் என்று வாழும் அடித்தட்டு மக்களும் தான்.


நேற்று (05 - 07 - 2010) நடந்த போராட்டத்தினால் இந்திய அரசுக்கு சுமார் 10,௦௦௦ கோடி ரூபாய் இழப்பு ஏற்ப்பட்டிருக்கிறதாம், எந்த ஒரு அரசியல்வாதியும் இந்த இழப்புக்கு பதில் சொல்லப் போவதில்லை, எப்படியும் விரைவில் இன்னொரு விதத்தில் இந்த பணத்தை வசூலிக்க தான் போகிறார்கள்.இதுவும் அத்யாவசிய பொருட்கள் என்ற பெயரில் வந்து சேரப் போவது நம் தலையில் தான்.

மக்களுக்கான பிரச்சனையில் அனைத்து கட்சிகளும் இது வரை ஓன்று சேர்ந்து போராடியதே இல்லை, இவற்றை பார்க்கும் பொது நேற்று நடந்தது விலை உயர்வுக்கான போராட்டமாக தெரியவில்லை, அடுத்த தேர்தலுக்காக முன்கூட்டியே நடந்த ஒரு பிரசாரமாகவே தெரிகிறது.



பெட்ரோல் மற்றும் டீஸல் பிரச்சனையை தீர்க்க சில வழிகள்...


1 . விமானங்களுக்கும் பெட்ரோல் உபயோகப்படுத்துவதால் செலவை குறைக்க விமானங்களுக்கு சிறக்குகள் கட்டி விடலாம்.



2 . குதிரை பந்தயங்களில் பயன்டுத்தப்பட்ட பழைய குதிரைகளை குறைந்த விலைக்கு வாங்கி வண்டியின் முன்னால் கட்டி இழுக்க வைக்கலாம். (பெட்ரோல் வாங்கும் செலவை விட குதிரைக்கு தீனி போடும் செலவு குறைவாகத் தான் இருக்கும்)


3 . சமீபத்தில் நடந்த விழ ஒன்றில் சமூக சேவகி த்ரிஷா அவர்கள் தெரு நாய்களை தத்து எடுக்க சொல்லியிருந்தார்கள். அதான் படி நாய்களை தத்தெடுத்து வண்டியின் முன்னால் கட்டி இழுக்க வைக்கலாம்.



4 . நம்ம வாத்தியார் M G R அவர்கள் நடித்த பழைய படங்களின் நீங்கள் பாய்மர கப்பல் பார்த்திருக்கலாம். அதில் வருவது போன்ற பாய்மரத்தை உங்க காரின் மேல் கட்டி காற்றடிக்கும் பக்கமா ஓட்டலாம். (துணி கிழியாம பத்திரமா பாத்துக்கணும்.)



5 . மேல சொன்னது எல்லாமே உங்களுக்கு சிரமமா இருந்தா... இதோ இப்படி கூட பைக் ஓட்டலாம்... அது உங்க விருப்பம்..

Driver



Bajaj Auto launched another fuel saver bike.....




After The SUCCESS of .........
.
.
.
.
.


CT100.......
.
.
.
.
.

PLATINA ............ .

.
.
.
.
.


Presenting.. .........
.
.
.
.
.
.
.
.


COWasaki BAJAJ

verumpaye


அட அப்படியே போன எப்படி சார்..
நம்ம புது வாகனத்தை பற்றி கருத்து சொல்லிட்டு போகலாமே....

எட்டிப் பாக்காதிங்க... இது புருஷன் பொண்டாட்டி சமாச்சாரம் ..


வணக்கம் சார்... நீங்க வருவீங்கன்னு எனக்கு தெரியும்.. வந்து உக்காந்து எங்க கூட ஒரு காபி சாப்பிட்டு அப்புறமா படிக்க ஸ்டார்ட் பண்ணலாமே...

ஏம்பா சர்வர்........ சாருக்கு சூடா ஒரு சுக்கு காபி பா ........ர்சல்...



கணவன் : ஏண்டி ! உன்னை யாரு ஆபீசுக்கு வரச்சொன்னது ?

மனைவி : வீட்டுல வேலைக்காரிய காணோம்,.... அதனாலத்தான் நீங்க ஆபீசுல இருக்கீங்களான்னு பார்க்க வந்தேன் !


மனைவி : என்னங்க... வேலை செய்யும் போது இடுப்புல கிள்ளாதிங்கன்னு எத்தன தடவ சொல்றது !

வேலைக்காரி : நல்லா கேளுங்கம்மா, நானும் எத்தனையோ தரம் சொல்லிட்டேன் அவரு கேக்குற மாதிரியில்ல !



கணவன் : இன்னும் எழு ஜென்மத்துக்கும் நீ தான் எனக்கு மனைவியா வரணும்....

மனைவி : அப்படீன்னா..... எட்டாவது ஜென்மத்தில எவ கூட சேர்ந்து வாழப்போறிங்க ?




கணவன் : ஐயையோ.....! திடீரென நெஞ்சு வலிக்குதே..?

மனைவி : என்னங்க நீங்க . ! நம்ம வக்கீல் ஊர்ல இல்லாத நேரத்தில இப்படி சொல்றீங்க..!



கணவன் : ஏண்டி... எப்போ பாத்தாலும் கோவமா எரிஞ்சு விழுற ?

மனைவி : நீங்க தானே சொன்னீங்க .! கொவப்படுறப்ப நான் ரொம்ப அழகா இருக்கேன்னு..!


மனைவி : என்னங்க.. நீங்க புட்டிபால் குடிச்சு தான் வளந்தீங்களா ?

கணவன் : எப்படி கண்டுபுடிச்ச ?

மனைவி : உங்கம்மா கிட்ட உள்ள வீரத்தில நூறுல ஒரு பங்கு கூட உங்க கிட்ட இல்லையே..!



கணவன் : என் இந்த மாசம் மட்டும் போன் பில் அதிகமா வந்திருக்கு ?

மனைவி : உங்க அம்மா வெளியூர் போயிட்டா நான் சும்மா இருக்க முடியுமா ? தினமும் S T D போட்டு சண்டை போட வேண்டியதா போச்சு...



மனைவி : என்னை நேற்று தூக்கத்தில கன்னா, பின்னாவென்று திட்டுனீங்க ..

கணவன் : யார் சொன்னது நான் தூக்கத்தில் தான் இருந்தேன் என்று..




டாக்டர் : உங்க மனைவி உடம்புக்கு என்ன வியாதி ?

கணவன் : அதுதான் தெரியல டாக்டர்..! ரெண்டு நாளா என் அம்மாவ புகழ்ந்து ரொம்ப பெருமையா பேசுறா..எனக்கு ரொம்ப பயமா இருக்கு டாக்டர்..!


ஹெலோ.. ஹெலோ .. இப்படி அவசரப்பட்டு கிளம்பினா எப்படி.. உங்க கருத்துக்களை சொல்லிட்டு போகலாமில்ல ..!

வெறும்பயலும் (வெட்டிப்பய) விஜய்யோட விசிறியும்




மதிப்பிற்கும் மரியாதைக்குரிய மானங்கெட்ட நண்பன் டோமர் ROMy அவர்களுக்கு சூறையாட வரும் சுறா என்று நான் எழுதிய பதிவுக்கு யாருமே எழுத முடியாத அல்லது இதுவரை யாரும் எழுதாத வண்ணம் நீங்கள் உனக்கு மரியாதை என்னடா நீ (அது போதும்) எழுதிய பின்னூட்டம் கண்டேன், ஒரு கணம் அதிர்ந்து போனேன், அதனால் தான் அந்த பின்னூட்டத்தை நீக்கம் செய்துவிட்டேன்,

நான் அந்த பின்னூட்டத்தை நீக்கம் செய்தாலும் கொஞ்சம் ஓட்கா, கொஞ்சம் விஸ்கி, கொஞ்சம் ரம், கொஞ்சம் பிராண்டி, கொஞ்சம் ஜின், கொஞ்சம் ஒயின், கொஞ்சம் பீர், இதோடு கொஞ்சம் நல்ல நாட்டு சாராயம் சேர்த்து ராவா குடிச்சதுக்கு அப்புறம் தான் என்னால் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடிந்தது.

அந்த காக்டைல் போதையில் இருந்தப்பதான் என்னால் யோசிக்க முடிந்தது. எந்த ஒரு மனிதனும் எழுத்தாளனாவதும், கவிதை எழுதுவதும் இந்த காலகட்டத்தில் தான் என்பதும் எனக்கு தெளிவாக புரிந்தது.

நண்பா டோமர் Romy நீ எழுதிய பின்னூட்டம் என்னை மானங்கெட்ட மனிதனாக மாற்றியது. மனிதனாக மாற்றியது என்பதை விட ஒரு மானங்கெட்ட ரசிகனாக மாற்றியது என்று தான் சொல்ல வேண்டும், நான் இப்போது சொல்கிறேன் உன் டைரியில் குறித்து வைத்துக்கொள், இன்றுமுதல் தினம் ஒரு விஜய் படம் பார்ப்பேன், தினம் ஒரு கவி சொல்வேன் விஜய் புகழ் குறித்து, பாரு எழுதிக்கிட்டு இருக்கும் போதே கவிதை வருது அதுவும் உன்ன பற்றி

இன்று வரை கண்டதில்லை உன்போல்
ஒருவனை, உரக்கசொல்வேன்
உயிர் கொடுப்பாய் நீ அந்த
உத(வா)வும் கரத்திற்கு

இந்த கவிதையை என்னை மானங்கெட்ட மனிதனாக மாற்றிய நண்பன் டோமர் ROMY க்கு சமர்பிக்கிறேன்.

இனி எங்கள் சாரி நம் தலைவன் பற்றி சில வார்த்தைகள்

இளைய தளபதி ,
விபூதி பூசா புலவன்,
உயிர் காக்கும் தோழன்,
வருங்கால எம் எல் ஏ ,
வருங்கால எம் ( ப்பி ),
வருங்கால முதல்வர்,
வருங்கால பிரதம மந்திரி,
வருங்கால ஜனாதிபதி,
வருங்கால அமெரிக்க ஜனாதிபதி விஜய் அவர்க்களின் ரசிகனாகவும், அவரது கட்சியில் ஒரு கடைநிலை ஊழியனாகவும் இருந்து என் உயிர் உள்ளவரை கட்சிக்காகவும், தலைவர் விஜய்க்காகவும் பாடுபடுவேன் என்றும் தலைவர் விஜய் அவர்கள் நடிக்கும் காவல்க்காரன் படத்தின் மீது அணையிட்டு, சத்தியம் செய்து கொள்கிறேன், இதில் ஏதாவது மாற்றம் ஏற்ப்பட்டால் செத்துப்போன குலுக்கல் குல குத்துவிளக்கு சில்க் ஸ்மிதா கல்லறை முன்பு நண்பா டோமர் ROMY உனக்கு மொட்டை அடிக்கிறேன், இது சத்தியம் சத்தியம் சத்தியம்.

இதப்பாருடா இன்னொரு கவிதையும் வருது பாரு

நண்பா இது உனக்காக ( மானக்கெட்ட ) நம் தானை தலைவர் பற்றி எழுதிய புதுக்கவிதை

தலைவா நீ சொன்னால் அது
நாளைய தீர்ப்பு,

முகம் சிவந்தால் நீ
செந்தூரப்பாண்டி.

தேவர்களுக்கு நீ
விஷ்ணு

நீ நேருக்கு நேர் பாத்தால்
மக்கள்
ஒன்ஸ்மோர் கேட்பார்கள்,

ஷாஜஹான் எனும்
ராஜாவின் பார்வையில் நீ
ரசிகன்,

வசந்தவாசலில் நீ
கோயம்பத்தூர் மாப்ளே,

நிலாவே வா உனக்காக
நான் காலமெல்லாம் காத்திருப்பேன்,

நினைத்தேன் வந்தாய் நீ
என் நெஞ்சினிலே ,

தமிழனாய் நீ தந்தாய் ஒரு
புதிய கீதை,

அழகிய தமிழ் மகனாய்
பிரண்ட்சை குஷி படுத்தினாய்,

மதுர வந்தால்
கில்லி தாண்டு விளையாடும்
போக்கிரி நீ,

பெண்களை வசீகரப்படுத்தும்
மாண்புமிகு மாணவன் நீ,

மின்சாரக்கண்ணா உன்னைக்கண்டால்
பெண்களின்
துள்ளாத மனமும் துள்ளும்,

சிவகாசி நடத்திய லவ் டுடே
விளையாட்டில் சச்சினுக்கும் உனக்கும்
நடந்தது பந்தயம்,

சந்திரலேகாவை மணம்புரிய
பத்ரிக்கு நீ கொடுத்தது
செல்வ(ம்),

கண்ணுக்குள் நிலவாய்
திருமலையில் உதயமானாய்,

சுறாவை பிடிக்க நீ
வாங்கியது திருப்பாச்சி அருவா,

இப்போது மக்கள் மனதில்

வில் ( லு ) பிடித்து வேட்டைக்காரனாய்
மக்களை வழிநடத்தும் அரசியல்
காவல்க்காரனாய் ......

இப்படிக்கு
பிரியமானவளே ( மன்னிக்கவும் ) ப்ரியமுடன்
மானங்கெட்ட மனிதன்..........

இதெல்லாம் படிச்சிட்டு விஜய்யை புகழ்ற மாதிரி தெரிஞ்சா நீதாண்டா விஜயோட முதல் ரசிகன்

நண்பா டோமர் RoMy நீ இந்த பதிவுலகத்தில் இருப்பது எனக்கு தெரியாது, நீதான் நடிகர் விஜயின் மெய்க்காப்பாளன் என்றும் விஜய் ஆரம்பிக்க போகும் கட்சியின் முதல் வேட்ப்பாளன் என்றும் எனக்கு மட்டும் தான் தெரியும், இந்த விசயத்தை பதிவுலக நண்பர்களுக்கு தெரிவித்ததற்கு என்னை மனித்து விடு நண்பா,

என்னை ஒரு மானங்கெட்ட மனிதனாக மாற்றியதற்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தையை சொல்லி என் நன்றிக்கடனை தீர்க்க விரும்பவில்லை, உனக்கான என் பாராட்டுகள் தொடரும்.......

மவனே இனிமே comment போடுவ நீ , ஏன்டா டோமர் ROMY இவ்வளவு நேரம் படிச்சியே நான் உன்ன ஓட்டுனனா இல்ல திட்டுனனா ஏதாவது புரிஞ்சுதா...

verumpaye. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக