ஞாயிறு, 25 நவம்பர், 2012

ஒரு 18+ ஜோக்!



ஒரு கடைக்கு ஒரு இளைஞன் வந்தான்.ஒரு ஆணுறை வாங்கினான்.பின் பெரிதாகச் சிரித்துக் கொண்டே சென்று விட்டான்.

மறுநாளும் அவன் வந்தான்.முதல்நாள் போலவே ஒரு ஆணுறை வாங்கினான்.மீண்டும் பெரிதாகச் சிரித்துக்  கொண்டே சென்று விட்டான்.

கடைக்காரருக்கு,இது விநோதமாகத் தோன்றியது;ஏன் அப்படிச் செய்கிறான் என அறிய ஆர்வம் பிறந்தது.

மறு நாளும் அவன் வந்தான் .முன்தினம் போலவே எல்லாம் நடந்தது.

அவன் சென்றவுடன் கடைக்காரர், தன் உதவியாளனை அழைத்து அவன் எங்கு செல்கிறான் என்று பார்த்து வரச் சொல்லி அனுப்பினார்.

போன உதவியாளன் சிறிது நேரம் கழித்துத் திரும்பினான்.

கடைக்காரர் அவன் எங்கே போனான் என ஆர்வத்துடன் வினவினார்.

அவன் சொன்னான்”உங்க வீட்டுக்குத்தான்!”

!!!!!!!!!!!!!!!!!!!!!

சூப்பர் ஐடியா!மாத்தி யோசிக்கிறாங்கப்பு!


மாத்தி யோசிக்கறதுங்கறாங்களே,அது இதுதானா?!




                                                     அப்படிப்போடு தாழ்ப்பாளை!
                                               காருக்கும் உண்டோ அடைக்கும் தாழ்!     





                        காப்பி மட்டும் குடிச்சாப் போதுமா?சாப்பிட ஏதாவது வேண்டாமா?
                                                             ஒரு குடி,அப்புறம் கடி!
                                 காப்பியைக் குடிங்க,பின் கோப்பையைச் சாப்பிடுங்க!
                கோப்பை கேக்கில் செய்தது;உள்ளே இருக்கும் மாவுச் சீனி  காக்கும் பூச்சு.

                                  ஒரு இத்தாலியக் காப்பிக் கம்பெனியின் தயாரிப்பு!


kuttikkunjan thanks

புதன், 31 அக்டோபர், 2012

வடிவேலுவும் ! தமிழ் பாடல்களும் !


வடிவேலுவும் ! தமிழ் பாடல்களும் !


 வணக்கம் நண்பர்களே !
                                             கொஞ்ச காலமா நம்ம  நகைச்சுவை நடிகர் வடிவேல் அண்ணன் பத்தி ஒண்ணுமே போடல ! அதனால அவர வச்சு ஒரு நகைச்சுவை பதிவ போடலாம்னு இந்த பதிவ போடுறேன் ! அதாவது நம்ம வடிவேல் அண்ணன் தியேட்டருக்கு போய் சில தமிழ் படங்கள பாக்குறார் ! அதுல வர்ற  சில தமிழ் பாடல்கள் அவர சில கேள்விகள் கேட்க வைக்குது ! அதுக்கு  வடிவேலு அண்ணன் கமெண்ட் குடுக்குறார் ! இது ஒரு கற்பனை கலந்த  நகைச்சுவை பதிவு ! யாருடைய  மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் !

பாடல் : ஏன் உச்சி மண்டைல சுர்ருங்குது !
வடிவேல்:  தம்பி ! வாராவாரம்  சனிக்கிழமை எண்ணெய் தேச்சு குளிப்பா! சரி ஆயிடும் !

 பாடல் : டாடி மம்மி  வீட்டில் இல்ல ! தட போட யாரும் இல்ல !
விளையாடுவோமா உள்ள வில்லாடா!
வடிவேல் : யே ! யே ! என்ன இது ! சின்ன புள்ள தனமா இருக்கு ! பொம்பள புள்ள மாதிரியா நடந்துக்குற ! இப்பிடி எல்லாம் பேசிக்கிட்டு இருந்த ! மவளே!!

பாடல் : டான் ! டான் ! டான் ! பில்லா டான் ! டானுக்கெல்லாம் டான் !
வடிவேல் : ஏன் தம்பி கோயில் மணி எதுவும் வாய்க்குள்ள போட்டு முழுங்கிட்டயா! ஏன்பா வாயில இருந்து டான் டான் சத்தம் வருது ! 

பாடல் : எவண்டி உன்ன பெத்தான் !பெத்தான் !பெத்தான்! அவன் கைல கெடச்சான் செத்தான் !
வடிவேலு : மவனே !  இப்ப நீ என் கைல கெடச்ச! பாட்ட பாரு !

பாடல் : ஒய் திஸ் கொலைவெறி ! கொலைவெறி !கொலைவெறிடி!
வடிவேல் :  அதேதான் நான் கேக்குறேன் ! உன்னை எல்லாம் யார் பாட்டெழுத சொன்னது !ஒய் திஸ் கொலைவெறி !


பாடல் : எந்திர்ர்ரா !எந்திர்ர்ரா !எந்திரா !எந்திரா!எந்திரா!எந்திரா!எந்திரா!என்திரன்!
வடிவேலு : இவரு ஏன் இத்தன தடவ நம்மள எந்திரிக்க சொல்றாரு ! தேசிய கீதம் பாட போறாரோ ! சரி எந்திருச்சுருவோம்! 

பாடல் : ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் !
வடிவேலு: ஸ்ஸ்ஸப்பா  முடியல ! முடியல !ஏன்டா அவசரம்னா போகசொல்ல வேண்டியதானே ! பாட்டு பாடிக்கிட்டு நிக்கிற!

பாடல் : மாக்க ஏல ! மாக்க ஏல ! காயகவுவா !
வடிவேல் : நல்லத்தனய்யா போய்கிட்டு இருந்துச்சு ! திடீர்னு ஏன் இந்தி பாட்ட போடுறாய்ங்க !


பாடல்: கட்டி புடி ! கட்டிபுடிடா! கண்ணாளா  கண்டபடி கட்டிபுடிடா!
வடிவேலு : அய்யோ ! அய்யோ ! அவன் சும்மா இருந்தாலும் இவ சும்மா இருக்க மாட்டா போலருக்கே ! அடியே!

கடைசியாக  வெறுத்துபோய் வீட்டுக்கு வந்து டிவி பார்க்கலாம்னு ரிமோட்ட ஆன் பண்றார் ! அப்பா ஒரு பழைய MGR பாடல் ஓடிக்கிட்டுருக்கு !

பாடல் : இன்பமே ! உந்தன் பேர் பெண்மையோ !
வடிவேல் : இவர் ஒருத்தரு ! அமுக்குன இடத்துலேயே அமுக்கிகிட்டு ! 

/vaanavilmadasamy. thanks

திங்கள், 29 அக்டோபர், 2012

மெடிக்கல் ரெப்ரசன்டேட்டிவ் 30/10/2012


அந்த மெடிக்கல் ரெப்ரசண்டேட்டிவ நம்ம பேங்க் மார்க்கெட்டிங்ல போட்டது தப்பாப்போச்சு!

ஏன் என்ன சார் செஞ்சாரு?

டாக்டருக்கு சாம்பிள் கொடுக்கறா மாதிரி எல்லாருக்கும் சாம்பிள் லோன் கொடுத்துருக்காருன்னா எங்க போய் சொல்ல?

கஷ்டப்படற நேரத்துல கடன் கொடுத்து உதவி செஞ்ச! நான் உனக்கு காலம் பூரா கடன் பட்டிருக்கேன்!

அதை நினைச்சுத்தான் நானும் பயப்படறேன்.

நபர் 1 : அந்த போட்டோகிராபருக்கு என்ன கொழுப்பு பார்த்தியா?

நபர் 2 : ஏன் என்னாச்சு?

நபர் 1 : உங்க சைசுக்கு உங்களை ஸ்டுடியோ கேமரா மூலமா எடுக்க முடியாது, சாட்டிலைட் மூலமா தான் எடுக்க முடியும்னு சொல்றான்.


வீரர் 1 : ரவுடியை கிரிக்கெட் விளையாட விட்டது தப்பா போச்சு
வீரர் 2 : ஏன் என்னாச்சு?
வீரர் 1 : லெக் பிரேக் டிரை பண்ணுனு சொன்னா 'கால ஒடிக்கிற தொழில்லாம் விட்டுட்டேன்னு சொல்றான்!

தெ. ஆ. கேப்டன் கிரேம் ஸ்மித் விக்கெட்டுகள் சரியும் போது :

"என்னடா ஸ்கோர் 100 தாண்டிடுச்சே இன்னும் ஒண்ணும் நடக்கலையேன்னு பாத்தேன்"


டிக்கெட் எல்லாம் முடிஞ்சு போச்சு எல்லாம் போங்க... போங்கன்னு சொல்றோம்ல!

ஏன் என்ன ஆச்சு ஃபுல் ஆயிடுச்சா?

நீங்க வேற மேட்சே அங்க முடிஞ்சு போச்சு

விசாரணஅதிகாரி : உங்க மனைவியோட வெளிநாட்டு வங்கிக் கணக்கில்தானே லஞ்சமா வாங்கினத் பணத்தைபபோட்டிருக்கீங்க? கமான் சொல்லுங்க!

மந்திரி: என்ன சார் இது? போட்டா உங்க கிட்ட மாட்டிக்க வேண்டியிருக்கு. போடாம இருந்தா வீட்டு வாசப்படிய மிதிக்காதீங்கன்னு அவ என்னை மிரட்டறா!



நடுவர்: (கேப்டன்களிடம்): கடைசியா உங்களை எச்சரிக்கி
றேன். இரண்டு டீமும் ஒழுங்கா விளையாடணும், சும்மா தகராறு வர்றா மாதிரி நடந்துக்கக் கூடாது ஓ.கே.?

கேப்டன்கள்: உங்களுக்கு வேற ஏதாவது 'கடைசி' ஆசை இருக்கா?


உங்பையனஎதிர்காலத்துபெரிகிரிக்கெடபிளேயரவருவான்னதோணுது!

அப்படியஎப்படி சொல்றீங்க?

வரலாறபாடத்துஅவனஃபெயிலஆவறதுக்கநானஎவ்வளவகாசதருவேன்னகேக்கறான்.

webdunia photo
WD
மேனேஜ‌ர் : டேபிள் மேல 5 ஈ இருந்தது. ஒன்றை நா‌ன் அடி‌ச்சது‌ம் ‌மீ‌தி எ‌த்தனை ஈ இரு‌க்கு‌ம்?

வேலை‌க்கு வ‌ந்தவ‌ர் : ஒ‌ன்று..

மேனேஜ‌ர் : ஒ‌ன்றா.. எ‌ப்படி?

வேலை‌க்கு வ‌ந்தவ‌ர் : ‌நீ‌ங்க அடி‌ச்‌சி‌ப் போட்‌ட ஈ அ‌ங்க தானே இரு‌க்கு‌ம்.



ஏ‌ன் மா‌ப்‌பி‌ள்ளை ‌வி‌சி‌ல் அடி‌ச்சா‌த்தா‌ன் தா‌லி க‌ட்டுவே‌ன்னு அட‌ம்‌பிடி‌க்‌கிறா‌‌ர்?

‌‌பி‌ன்ன பேரு‌ந்து ஓ‌ட்டுநரா‌ச்சே.. அதா‌ன்.


ஜோக்ஸ்
FILE
கமலா: எ‌வ்ளோ நாளா‌‌ச்சுடி உ‌ன்ன‌ை‌ப் பா‌ர்‌த்து...எ‌ப்படி இரு‌க்க?
WD
எ‌ன் பொ‌ண்டா‌ட்டிய எ‌ன்ன தா‌ன் செ‌ய்றது? ஏ‌ன் எ‌ன்ன ப‌ண்றா‌ங்க?
மேலும் படிக்க
webdunia photo
FILE
கண்டெய்னர்ல ரேஷன் அரிசி தான் கடத்திட்டு வறாங்கன்னு எப்படிய்யா அவ்ளோ கரெக்டா சொ‌ல்ற..?
• கதாநாய‌கி • அனாதை டா‌க்ட‌ர்
• செரு‌ப்பு கடை • ‌தீபாவ‌ளி கூ‌ட்‌ட‌ம்
• தலை ‌தீபாவ‌ளி • ‌பி‌ள்ளை பாச‌ம்


ஞாயிறு, 28 அக்டோபர், 2012

கரகாட்டக்காரனை ரீமேக் செய்யும் கெளதம் மேனன் !


கரகாட்டக்காரனை ரீமேக் செய்யும் கெளதம் மேனன் !!!!

வணக்கம் நண்பர்களே !
                                                
 நம்ம (கி)ராமராஜன் அண்ணன்,  ஸ்டைலிஷ் இயக்குனர் கௌதம் படத்துல நடிக்கிறார் ! என்னங்க  Shocking ஆ  இருக்கா ! எனக்கும்தான்!  கீழ படிச்சு பாருங்க அப்படியே காமெடியாவும்  இருக்கும். ஒன்னும் இல்லைங்க அதாவது  கரகாட்டக்காரன்  படத்த கெளதம் ரீ மேக் பண்ணுனா எப்படி இருக்கும்னு ஒரு சிறு கற்பனை மனதில் தோன்றியது . ரெண்டே ரெண்டு சீன் தான் எழுதி இருக்கேன் . படிச்சுட்டு நல்லா இருந்தா சொல்லுங்க !

             
 காட்சி :ராமராஜன் முதன் முதலா கரகம் ஆடியதை கண்டு அவருக்கு   ஷண்முக சுந்தரம் மரியாதை செய்து வீட்டிற்கு காப்பி சாப்பிட அழைக்கும் காட்சி

 ச.சுந்தரம் :  Dear All,  Well performance  done by Mr. Muthaiyan ! இந்த மாலைய  உங்க எல்லார் சார்பிலையும் இத நான் அவருக்கு போடுறேன் ! தம்பி!  நல்லா ஆடுனீங்க  தம்பி  well done !
 I have not seen ever such a dance like this ! super  தம்பி ! வெளியூர் ஆட்டகாரன  உள்ளூர்  ஆட்டக்காரன் மதிக்குறதுதாங்க மரியாதை ! 

ராமராஜன் :  தேங்க்ஸ்

அவர் சென்ற உடன்  தர்மகர்த்தா சந்தான பாரதி  ராமரஜனுக்கு மரியாதையை செய்ய வருகிறார் .


சந்திர சேகர் : Sir  ! வாட் இஸ் திஸ் ! Shame Shame puppy shame !I didn't expect from you !

கனகா : uncle leave it !  He is always doing like this !

சந்தான பாரதி: you  two  people are making problem !get lost !

கனகா  (ராமராஜனை  பார்த்து ):Hey Man ! Can you  come for competition  with me ?

ராமராஜன்: competition எல்லாம் எனக்கு கமர்கட்டு சாப்புடுறமாதிரி ! எங்க வச்சுக்கலாம் ! எப்ப வச்சுக்கலாம்

கனகா : எங்க வேணாலும் ! எப்ப வேணாலும்

ராமராஜன் : அப்ப ready ங்குற !

கனகா: Yes ! what you told ,You're going to break my knee?  Let see !

 ------------------------------------------------------------------------------------------------------------------
விருந்து சாப்பிட போகும் காட்சி

 கௌண்டமணி : தம்பி ! ( ராம ராஜன் நெஞ்சில் கைவைத்து) இங்க என்ன சொல்லுது ! காமாட்சி ! காமாட்சி னு சொல்லுதா ?

ராமராஜன் : ஆமாண்ணே ! அவ கண்ணு வழியா என்ன பார்க்கணும் போல இருக்கு !

ச.சுந்தரம் : அடேடே! வாங்க தம்பி ! என்ன அங்கேயே நின்னுடீங்க ! உள்ள வாங்க !

உள்ளே வந்தபின்

ச. சுந்தரம் : தம்பி ! have some coffee, tea, snacks !


ராமராஜன்: no thanks !

 கௌண்டமணி: தம்பி அதெல்லாம் சாபிடுறது இல்ல ! நீங்க  எங்களுக்கு மட்டும் சொல்லுங்க ! தம்பிக்கு ஒரு பீர் சொல்லுங்க !ச்ச !மோர் சொல்லுங்க !

ச.சுந்தரம் :  எம்மா  காமாட்சி  தம்பிக்கு  மோர்  கொண்டு வா !

கனகா  மோர் கொண்டுவைக்கிறார் !

அப்போது ராமராஜன் கனகாவிடம் :  I am crazy about you !

 ச.சுந்தரம்: தம்பி ! have it ! I am extremely sorry  for the incident happened on that day night . I don't like competition !


ராமராஜன்: Sorry ! i am not responsible for that  uncle !

 ச.சுந்தரம்: OK தம்பி ! Leave it ! நீங்க சின்ன வயசுல இருந்தே ஆடுறீங்க போல !  ஆட்டத்த எங்க கத்துக்கிட்டீங்க ?

கௌண்டமணி : ஆட்டகாரங்ககிட்ட !

 ராமராஜன்:  அண்ணே ! Stop  funny ! actually my father was a great dancer ! he got so many medals ! also he got medal from MGR . After his death , My mother trained me !she is also a good dancer ! எனக்கு எல்லாமே அம்மாதான்!  நீங்க கூட பார்த்திருப்பீங்களே !

ச. சுந்தரம் : நோ ! பார்த்தது இல்ல ஆனா நிறைய கேள்விபட்டுருக்கேன் ! சரி தம்பி நீங்க சாப்பிட்டுகிட்டு இருங்க நான் போயிட்டு வர்றேன் !


அவர் போனவுடன் நம்ம  அண்ணன் கிராமராஜன் காமாட்சி (கனகா ) மேல லவ்வு வந்து  பாட்டு பாட  ஆரம்பிக்கிறாரு.  கீழே சொடுக்குங்க  அந்த அழகான பாட்ட பார்க்குறதுக்கு !


என்னடா கரகாட்டக்காரன் பாட்ட போடுறதுக்கு வில்லுபாட்டுகாரன் பாட்ட போடுரான்னு பாக்குறீங்களா ! அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க ! இந்த பாட்ட பாத்ததுக்கப்புறம் தான்  எனக்கு இந்த பதிவு யோசனையே வந்தது ! அப்புறம் பாதி வசனம் ஆங்கிலத்துல வருதேன்னு குழம்பாதீங்க ! நம்ம கெளதம் படம் அப்படித்தானே  பாதி இங்கிலீஷ் பாதி தமிழ்னு  எடுப்பார் !மறக்காம  கருத்துரைக்கவும் ! பிடித்திருந்தால் ஓட்டு போட்டு  அதிகம் பேர் படிக்க பரிந்துரை செய்யவும் !

நன்றியுடன்
இரா.மாடசாமி

நகைச்சுவை


நகைச்சுவை கவிதை கதம்பம்

வணக்கம் நண்பர்களே !
                                                   நீண்ட நாட்களுக்கு பிறகு எனது யார் நடிகன் ?   

பதிவுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்தன . வாக்களித்த அனைவருக்கும் மிக்க

 நன்றி !  ஒரு சிறிய  கதம்பம்   ஒன்றை இந்த பதிவில் விட்டு செல்கிறேன் !

 -----------------------------------------------------------------------------------------------------------------------
கவிதை 

இசைக்கருவிகள்

காலில் படக்கூடாதம் !

கழட்டிவிடு கண்ணே!

உன் கொலுசுகளை !
--------------------------------------------------------------------------------------------------------------------------
நகைச்சுவை 



ஆசிரியர்:  ஏண்டா   இவ்வளவு லேட்டா  வர்ற  !

மாணவன் : இந்த  பொண்ண  பின் தொடர்ந்து வந்தேன்   சார் !

ஆசிரியர்:  ஏம்மா  நீ ஏன் லேட்டு ! நீ வர வேண்டியதானே !

மாணவி :  அவன் ரொம்ப மெதுவா பின் தொடர்ந்தான் சார் !

          **************************************************

ஆசிரியை : மாணவர்களே!இப்ப ஒரு வாக்கியம் சொல்வேன்  அது எந்த

                         காலத்தை  குறிக்கிறது என சொல்லணும் சரியா ?

மாணவர்கள் : சரிங்க டீச்சர் !

ஆசிரியை: நான் அழகாக  இருக்கிறேன் ! இது எந்த காலம் ?

மாணவர்கள் : இறந்த காலம் டீச்சர் !

        ******************************************************

ஆசிரியர் : நெப்போலியனின்  வெற்றிகள்  பற்றி சொல்லு  ?


மாணவன்: சீவலப்பேரி பாண்டி , கிழக்கு சீமையிலே , எட்டுபட்டி ராசா !

       **********************************************************  


--------------------------------------------------------------------------------------------------------------------------

 கணிணினியில் தட்டச்சு செய்து கொண்டிருந்த என்னிடம் சொன்னான்

 என் மகன்

" உங்க கம்ப்யூட்டர் தப்புப்பா"!

 ஏண்டா?  என்றேன்  ஆச்சர்யத்தோடு !

"நயன்க்கு  அப்புரம் டென் தானே  வரும் ! இங்க பாருங்க ஜீரோ இருக்கு!

 மழலையின் அறிவில் பூரிப்படைந்தேன் !

 -------------------------------------------------------------------------------------------------------------------------




நன்றியுடன்

இரா.மாடசாமி

சிரிப்பு வருது ! சிரிப்பு வருது !


சிரிப்பு வருது ! சிரிப்பு வருது !

வணக்கம் நண்பர்களே !
                                             பின் வரும் நகைச்சுவைகள் அனைத்தும் நான் பார்த்து, படித்த , கேள்வி பட்ட நகைச்சுவைகள் மட்டுமே ! எதுவும் எனது சொந்த படைப்பு கிடையாது! ஆதலால்,  "நான் இதை  எங்கேயோ படிச்சுருக்கேன் !" என்று யோசிக்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டு கொள்ளபடுகிறார்கள்!






அலெக்சாண்டர்:  முடியாது என்கிற வார்த்தையே என் அகராதியிலேயே  கிடையாது !
சர்தார்ஜி : அதுக்கு இப்போ  என்ன பண்றது ! டிக்க்ஷனரி வாங்கும்போதே பாத்து வாங்கணும் !
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

கணவன் : பங்கஜம் நீ பண்ணுன மைசூர்பா நல்ல இருக்கு ! ஆனா கடிக்கத்தான் முடியல ! கல்லு மாதிரி இருக்கு!
மனைவி : என்ன கொழுப்பு உங்களுக்கு !  அது அல்வா!
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
 
பயணி : நீங்க வண்டி ஒட்டுறதா பார்த்த பயமா இருக்குங்க !
டிரைவர் : பயமா இருந்த என்னை மாதிரி நீங்களும் கண்ணை மூடிக்குங்க !
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

ஆசிரியர் : உங்க பையனுக்கு தமிழ் உச்சரிப்பு சரியா வரல ! "ஏராளம்" அப்படீன்னு சொல்லச்சொன்னா "ஏளாரம்" அப்டீன்னு சொல்றான் ! டியூஷன் வச்சு தான் சொல்லி கொடுக்க முடியும் !
மாணவனின் தந்தை : அதுக்கு என்னங்க "தாளாரமா" சொல்லி குடுங்க !
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

நர்ஸ்: டாக்டர்! அந்த பேஷண்டுக்கு மயக்க மாத்திரை குடுத்தும் மயக்கம் வரல!
டாக்டர் : ஹாஸ்பிட்டல் பில்லை காமிங்க ! மயக்கம் வந்திடும் !
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

அப்பா : எல்லா பாடத்துலயும் பெயிலாயிட்டு என்கிட்டே Sign கேக்குறியா ! என்ன உன் அப்பன்னு சொல்லாதடா !
மகன் : சரி மச்சி  சீன் போடாம  Sign போடு
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
ஆசிரியர் : மாணவர்களே ! என்னை ஆசிரியராக பாவிக்காமல் உங்களில் ஒருவனாக எண்ணுங்கள !
மாணவன் :  மாப்ள  ! ஜன்னல் பக்கத்துல பாரேன் ! சூப்பர் figure !
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
நோயாளி : டாக்டர் ! உடம்புல  சத்தே இல்லை டாக்டர் !
டாக்டர் :அதுக்கு தான்  சத்து டானிக் எழுதி கொடுத்தேனே !
நோயாளி : அந்த டானிக் மூடிய  தொறக்கவே முடியல டாக்டர் ! 
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ 


நகைச்சுவை அனைத்தும்  மொக்கையாக இருந்ததா?!  நன்றாக இருந்ததா ! கருத்துரைக்கவும் !  


நன்றியுடன்

இரா.மாடசாமி