- எல்லாமே சைவம் தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கோ...
- மதுரை பதிவர்கள் சந்திப்பு எப்பொழுது?
- ஒரு ஆணின் திருமண நாள் நினைவு
- இன்று என்று நினைப்பது இன்றே அல்ல அது நேற்று
- என் நாடு, என் அடையாளம்,
- அட்ராசக்க தூக்குட அத அவார்ட் தொடர்கிறது-2.
- உலகிலேயே பெரிய்ய்யய்யய்ய்ய்ய ஹோட்டல் - சீனா மேலும்...
- அட்ராசக்க தூக்குட அத அவார்ட்ஸ்
- நாங்களும் சுடுவோம்ல
- ஏடாகூட ஜோக்குகள் - பெண்கள் ஏன் புருஷனை விட தங்கத்...
- என் பார்வையில் மரகதமணியின் சிறந்த பத்து ஹிந்தி பா...
- கடவுள் என்ன பண்ணுவார்..டென்ஷன் தான் ஆவாரு.
- நரகத்தில் என்ன நடக்கிறது - உண்மை அம்பலம்.
- 'ஆஹா...வடை போச்சே...'
- சின்ன பசங்க கொஞ்சம் அந்த பக்கம் போங்க -பாகம் ரெண்ட...
- சின்ன பசங்க கொஞ்சம் அந்த பக்கம் போங்க - கூட்டல் பத...
- வீட்டிலேயே வேலை வேண்டுமா?
- இதயத்தை பாதுகாக்க யோசனைகள்
- ஒரே இடுகையை இரண்டு முறை திரட்டியில் இணைப்பது எப்பட...
- அண்ணன் அழகிரிக்கு நன்றி
- எவன் சொன்னது? நம்ம ஒலகம் ரொம்ப பெருசுன்னு.கூட்டி வ...
- அப்பா...
- கம்ப்யூட்டர் வாங்கிய நம்ம சுப்புரமணியின் சந்தேகம்....
- ஒரு கணிதப் புதிர்
- இது தாண்டா ராஜ வாழ்க்கை
- சமைக்கும் போது பாத்திரத்தில் உள்ள எண்ணெய் தீப்பிடி...
- திருவனந்தபுர பொக்கிஷத்தில் ‘இருந்ததில், பாதிக்கு ம...
- யோகாசனம் செய்யலாமா? சரக்கு அடித்து விட்டு?
- தண்ணியடிக்கிறதும் யோகாசனம் பண்றதும் ஒன்றே.
- நான் ஒன்னு சொல்லுவேன்... எழுந்திருச்சு ஓடக்கூடாது....
- சாலைகள் இல்லாத ஒரு கிராமம்
- கொஞ்சம் சிரிங்க சார்
- கொஞ்சம் சிரிக்கலாம் தப்பில்லை
- பள்ளிக்கூட கட்டணம்- அரசு என்ன செய்து கொண்டு இருக்...
- இரண்டரை ரூபாய் நோட்டு பார்த்து இருக்கீங்களா?
- பள்ளிக்கூட கட்டணம்- அரசு என்ன செய்து கொண்டு இருக்...
- என் நண்பனின் இடுகைகள்
- வைரமுத்துவையும் என்னையும் சமமாக கருதிய நல்ல உள்ளங்...
- பேச்சுரிமையை இழக்கலாமா?
- ஏர் டெல் கஸ்டமர் கேர்
- பிரா எத்தனை வகை? ஒரு நகைச்சுவை அலசல்.
- பெண்களும் ரசிக்கும் கட்டில் கவிதை
- எந்திரன் காப்பியடிக்கப்பட்ட கதையா? சில விளக்கங்கள்...
- உண்மையாகவா?
- கணினி வல்லுனர்களே உங்களுக்கு ஒரு சவால். சந்திக்க த...
ஞாயிறு, 26 மே, 2013
எல்லாமே சைவம் தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கோ...
புதன், 13 பிப்ரவரி, 2013
சும்மா எட்டிப்பாருங்க சார் இது உங்க வீட்டு சமாச்சாரம் தான்
சும்மா எட்டிப்பாருங்க சார் இது உங்க வீட்டு சமாச்சாரம் தான்
கல்யாணமாகிற வரைக்கும் சுதந்திரமா, எந்த கவலையும்
இல்லாம பாக்கிற பொண்ணுகள எல்லாம் டாவடிச்சு கிட்டு நான் வீரன், சூரன், ஒரு யானை
வந்தாலும் தனியா சமாளிப்பேன் அப்படீன்னு உதார் விட்டுகிட்டு இருக்கிற நம்ம ஆம்பள
சிங்கங்களோட உலகமே மாறிப்போகுமுங்க....
....கல்யாணம் ஆனதும் ......
....கல்யாணம் ஆனதும் ......
......இதோ இப்படி தான்......
வாங்க
வந்து நம்ம சிங்கங்கள் கஷ்டப்படுறத
பாருங்க..

நேத்து பொண்டாட்டி மேல வந்த கோவத்தில என்ன சார் செஞ்சீங்க.?
சாம்பார்ல உப்பை இஷ்டத்துக்கு அள்ளி போட்டுட்டேன்..
..............................................

சார் உங்க கேரியர்ல மறக்க முடியாதது எது ?
நேத்து என் பொண்டாட்டி கொடுத்தனுப்பிய பழைய சாதமும், பச்சை மிளகாவும்...
..............................................

இன்னைக்கு வீட்டில பயங்கரமா சத்தம் போட்டீங்களே யாரங்க?
என்னோட பொண்டாட்டிய தான்..
அவங்க தான் ஊர்ல இல்ல போலிருக்கே..
அந்த தைரியத்தில தான் திட்டினேன்..
..............................................

அப்பா இன்னைக்கு எங்க பள்ளில ஒரு மாஜிசியின் ஐந்து ரூபா நோட்டை ரொட்டியா மாத்திட்டாருபா..
ப்பூ.. இதென்ன பிரமாதம் உங்கம்மா கிட்டே ஐநூறு ரூபா கொடுத்த அஞ்சு நிமிசத்தில சேலையா மாத்தி காமிச்ச்ருவா...
..............................................

டார்லிங் உனக்கு என்னை பிடிச்சிருக்கா..?
எனக்கு பிடிக்காதது எதையும் நான் விலை கொடுத்து வாங்குறதில்லைங்க..
..............................................

உங்க புடவை வெள்ளை வேளேர்ன்னு பள பளக்க என்ன உபயோகிக்றீங்க ..
என்னோட கணவரை தான்..
..............................................

இதப்பாருங்க இனிமேல் நாம ஒருத்தருக்கொருத்தர் உதவியா இருக்கணும்.. நாளையிலேர்ந்து உங்க கர்ச்சீப்பை நான் துவச்சு மடிச்சு வைக்கிறேன்.. நீங்க என்னோட துணி மணிகளை துவச்சு அயர்ன் பண்ணி வைக்கணும் சரியா...

ஹெலோ ஹெலோ ... எதுக்கு இப்போ
இப்படி முறைக்கிறீங்க .. சில சமயம் உண்மைகள வெளிய சொன்ன கொஞ்சம கஷ்டமா தான்
இருக்கும். இதுக்கெல்லாம் போய் கோவிச்சுக்கிட்டு..
விடுங்க
பாஸ் இது
எல்லார் வீட்டிலேயும்
நடிக்கிறது தான்..
பாருங்க உங்களுக்கு
முன்னாடி வந்தவங்க
எவ்வளவு நாகரீகமா
கருத்துகளை சொல்லிட்டு
போறாங்க..
நீங்க என்ன பண்ண போறீங்க..
நீங்க என்ன பண்ண போறீங்க..
பெட்ரோல் போராட்டமும் அதற்கான தீர்வுகளும்...
செய்தி:
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாரதிய ஜனதா, இடதுசாரி கட்சிகள் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெறாத கட்சிகள் சார்பில், நேற்று, "பாரத் பந்த்' அறிவிக்கப்பட்டது.இந்த, "பந்த்'தால் நாட்டின் பல பகுதிகளில் நேற்று மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஒரு சராசரி
இந்தியனாக எனது பார்வை ...
எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் கடைசியில் பாதிக்கப்படுவது என்னவோ, ஒவ்வொரு மாதமும் இவ்வளவு தான் செலவு என்று பட்ஜெட் போட்டு வாழும் நடுத்தர மக்களும், அன்றைய தேவைகளை மட்டுமே பூர்த்தியானால் போதும் என்று வாழும் அடித்தட்டு மக்களும் தான்.
நேற்று (05 - 07 - 2010) நடந்த போராட்டத்தினால் இந்திய அரசுக்கு சுமார் 10,௦௦௦ கோடி ரூபாய் இழப்பு ஏற்ப்பட்டிருக்கிறதாம், எந்த ஒரு அரசியல்வாதியும் இந்த இழப்புக்கு பதில் சொல்லப் போவதில்லை, எப்படியும் விரைவில் இன்னொரு விதத்தில் இந்த பணத்தை வசூலிக்க தான் போகிறார்கள்.இதுவும் அத்யாவசிய பொருட்கள் என்ற பெயரில் வந்து சேரப் போவது நம் தலையில் தான்.
மக்களுக்கான பிரச்சனையில் அனைத்து கட்சிகளும் இது வரை ஓன்று சேர்ந்து போராடியதே இல்லை, இவற்றை பார்க்கும் பொது நேற்று நடந்தது விலை உயர்வுக்கான போராட்டமாக தெரியவில்லை, அடுத்த தேர்தலுக்காக முன்கூட்டியே நடந்த ஒரு பிரசாரமாகவே தெரிகிறது.
பெட்ரோல் மற்றும் டீஸல்
பிரச்சனையை தீர்க்க சில வழிகள்...
1 . விமானங்களுக்கும் பெட்ரோல் உபயோகப்படுத்துவதால் செலவை குறைக்க விமானங்களுக்கு சிறக்குகள் கட்டி விடலாம்.

2 . குதிரை பந்தயங்களில் பயன்டுத்தப்பட்ட பழைய குதிரைகளை குறைந்த விலைக்கு வாங்கி வண்டியின் முன்னால் கட்டி இழுக்க வைக்கலாம். (பெட்ரோல் வாங்கும் செலவை விட குதிரைக்கு தீனி போடும் செலவு குறைவாகத் தான் இருக்கும்)

3 . சமீபத்தில் நடந்த விழ ஒன்றில் சமூக சேவகி த்ரிஷா அவர்கள் தெரு நாய்களை தத்து எடுக்க சொல்லியிருந்தார்கள். அதான் படி நாய்களை தத்தெடுத்து வண்டியின் முன்னால் கட்டி இழுக்க வைக்கலாம்.

4 . நம்ம வாத்தியார் M G R அவர்கள் நடித்த பழைய படங்களின் நீங்கள் பாய்மர கப்பல் பார்த்திருக்கலாம். அதில் வருவது போன்ற பாய்மரத்தை உங்க காரின் மேல் கட்டி காற்றடிக்கும் பக்கமா ஓட்டலாம். (துணி கிழியாம பத்திரமா பாத்துக்கணும்.)

5 . மேல சொன்னது எல்லாமே உங்களுக்கு சிரமமா இருந்தா... இதோ இப்படி கூட பைக் ஓட்டலாம்... அது உங்க விருப்பம்..
Bajaj Auto launched
another fuel saver bike.....
After
The SUCCESS of .........
.
.
.
.
.
.
.
.
.
CT100.......
.
.
.
.
.
PLATINA ............ .
.
.
.
.
PLATINA ............ .
.
.
.
.
.
.
.
.
.
Presenting.. .........
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
COWasaki BAJAJ
அட அப்படியே போன எப்படி சார்..
நம்ம புது வாகனத்தை பற்றி கருத்து சொல்லிட்டு போகலாமே....
நம்ம புது வாகனத்தை பற்றி கருத்து சொல்லிட்டு போகலாமே....
எட்டிப் பாக்காதிங்க... இது புருஷன் பொண்டாட்டி சமாச்சாரம் ..

வணக்கம் சார்... நீங்க வருவீங்கன்னு எனக்கு தெரியும்.. வந்து உக்காந்து எங்க கூட ஒரு காபி சாப்பிட்டு அப்புறமா படிக்க ஸ்டார்ட் பண்ணலாமே...
ஏம்பா சர்வர்........ சாருக்கு சூடா ஒரு சுக்கு காபி பா ........ர்சல்...

கணவன் : ஏண்டி ! உன்னை யாரு ஆபீசுக்கு வரச்சொன்னது ?
மனைவி : வீட்டுல வேலைக்காரிய காணோம்,.... அதனாலத்தான் நீங்க ஆபீசுல இருக்கீங்களான்னு பார்க்க வந்தேன் !
மனைவி : என்னங்க... வேலை செய்யும் போது இடுப்புல
கிள்ளாதிங்கன்னு எத்தன தடவ சொல்றது !வேலைக்காரி : நல்லா கேளுங்கம்மா, நானும் எத்தனையோ தரம் சொல்லிட்டேன் அவரு கேக்குற மாதிரியில்ல !

கணவன் : இன்னும் எழு ஜென்மத்துக்கும் நீ தான் எனக்கு மனைவியா வரணும்....
மனைவி : அப்படீன்னா..... எட்டாவது ஜென்மத்தில எவ கூட சேர்ந்து வாழப்போறிங்க ?

கணவன் : ஐயையோ.....! திடீரென நெஞ்சு வலிக்குதே..?
மனைவி : என்னங்க நீங்க . ! நம்ம வக்கீல் ஊர்ல இல்லாத நேரத்தில இப்படி சொல்றீங்க..!

கணவன் : ஏண்டி... எப்போ பாத்தாலும் கோவமா எரிஞ்சு விழுற ?
மனைவி : நீங்க தானே சொன்னீங்க .! கொவப்படுறப்ப நான் ரொம்ப அழகா இருக்கேன்னு..!

மனைவி : என்னங்க.. நீங்க புட்டிபால் குடிச்சு தான் வளந்தீங்களா ?
கணவன் : எப்படி கண்டுபுடிச்ச ?
மனைவி : உங்கம்மா கிட்ட உள்ள வீரத்தில நூறுல ஒரு பங்கு கூட உங்க கிட்ட இல்லையே..!

கணவன் : என் இந்த மாசம் மட்டும் போன் பில் அதிகமா வந்திருக்கு ?
மனைவி : உங்க அம்மா வெளியூர் போயிட்டா நான் சும்மா இருக்க முடியுமா ? தினமும் S T D போட்டு சண்டை போட வேண்டியதா போச்சு...

மனைவி : என்னை நேற்று தூக்கத்தில கன்னா, பின்னாவென்று திட்டுனீங்க ..
கணவன் : யார் சொன்னது நான் தூக்கத்தில் தான் இருந்தேன் என்று..

டாக்டர் : உங்க மனைவி உடம்புக்கு என்ன வியாதி ?
கணவன் : அதுதான் தெரியல டாக்டர்..! ரெண்டு நாளா என் அம்மாவ புகழ்ந்து ரொம்ப பெருமையா பேசுறா..எனக்கு ரொம்ப பயமா இருக்கு டாக்டர்..!

ஹெலோ.. ஹெலோ .. இப்படி அவசரப்பட்டு கிளம்பினா எப்படி.. உங்க கருத்துக்களை சொல்லிட்டு போகலாமில்ல ..!
வெறும்பயலும் (வெட்டிப்பய) விஜய்யோட விசிறியும்

மதிப்பிற்கும் மரியாதைக்குரிய மானங்கெட்ட நண்பன் டோமர் ROMy அவர்களுக்கு சூறையாட வரும் சுறா என்று நான் எழுதிய பதிவுக்கு யாருமே எழுத முடியாத அல்லது இதுவரை யாரும் எழுதாத வண்ணம் நீங்கள் உனக்கு மரியாதை என்னடா நீ (அது போதும்) எழுதிய பின்னூட்டம் கண்டேன், ஒரு கணம் அதிர்ந்து போனேன், அதனால் தான் அந்த பின்னூட்டத்தை நீக்கம் செய்துவிட்டேன்,
நான் அந்த பின்னூட்டத்தை நீக்கம் செய்தாலும் கொஞ்சம் ஓட்கா, கொஞ்சம் விஸ்கி, கொஞ்சம் ரம், கொஞ்சம் பிராண்டி, கொஞ்சம் ஜின், கொஞ்சம் ஒயின், கொஞ்சம் பீர், இதோடு கொஞ்சம் நல்ல நாட்டு சாராயம் சேர்த்து ராவா குடிச்சதுக்கு அப்புறம் தான் என்னால் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடிந்தது.
அந்த காக்டைல் போதையில் இருந்தப்பதான் என்னால் யோசிக்க முடிந்தது. எந்த ஒரு மனிதனும் எழுத்தாளனாவதும், கவிதை எழுதுவதும் இந்த காலகட்டத்தில் தான் என்பதும் எனக்கு தெளிவாக புரிந்தது.
நண்பா டோமர் Romy நீ எழுதிய பின்னூட்டம் என்னை மானங்கெட்ட மனிதனாக மாற்றியது. மனிதனாக மாற்றியது என்பதை விட ஒரு மானங்கெட்ட ரசிகனாக மாற்றியது என்று தான் சொல்ல வேண்டும், நான் இப்போது சொல்கிறேன் உன் டைரியில் குறித்து வைத்துக்கொள், இன்றுமுதல் தினம் ஒரு விஜய் படம் பார்ப்பேன், தினம் ஒரு கவி சொல்வேன் விஜய் புகழ் குறித்து, பாரு எழுதிக்கிட்டு இருக்கும் போதே கவிதை வருது அதுவும் உன்ன பற்றி
இன்று வரை கண்டதில்லை உன்போல்
ஒருவனை, உரக்கசொல்வேன்
உயிர் கொடுப்பாய் நீ அந்த
உத(வா)வும் கரத்திற்கு
இந்த கவிதையை என்னை மானங்கெட்ட மனிதனாக மாற்றிய நண்பன் டோமர் ROMY க்கு சமர்பிக்கிறேன்.
இனி எங்கள் சாரி நம் தலைவன் பற்றி சில வார்த்தைகள்
இளைய தளபதி ,
விபூதி பூசா புலவன்,
உயிர் காக்கும் தோழன்,
வருங்கால எம் எல் ஏ ,
வருங்கால எம் ( ப்பி ),
வருங்கால முதல்வர்,
வருங்கால பிரதம மந்திரி,
வருங்கால ஜனாதிபதி,
வருங்கால அமெரிக்க ஜனாதிபதி விஜய் அவர்க்களின் ரசிகனாகவும், அவரது கட்சியில் ஒரு கடைநிலை ஊழியனாகவும் இருந்து என் உயிர் உள்ளவரை கட்சிக்காகவும், தலைவர் விஜய்க்காகவும் பாடுபடுவேன் என்றும் தலைவர் விஜய் அவர்கள் நடிக்கும் காவல்க்காரன் படத்தின் மீது அணையிட்டு, சத்தியம் செய்து கொள்கிறேன், இதில் ஏதாவது மாற்றம் ஏற்ப்பட்டால் செத்துப்போன குலுக்கல் குல குத்துவிளக்கு சில்க் ஸ்மிதா கல்லறை முன்பு நண்பா டோமர் ROMY உனக்கு மொட்டை அடிக்கிறேன், இது சத்தியம் சத்தியம் சத்தியம்.
இதப்பாருடா இன்னொரு கவிதையும் வருது பாரு
நண்பா இது உனக்காக ( மானக்கெட்ட ) நம் தானை தலைவர் பற்றி எழுதிய புதுக்கவிதை
தலைவா நீ சொன்னால் அது
நாளைய தீர்ப்பு,
முகம் சிவந்தால் நீ
செந்தூரப்பாண்டி.
தேவர்களுக்கு நீ
விஷ்ணு
நீ நேருக்கு நேர் பாத்தால்
மக்கள்
ஒன்ஸ்மோர் கேட்பார்கள்,
ஷாஜஹான் எனும்
ராஜாவின் பார்வையில் நீ
ரசிகன்,
வசந்தவாசலில் நீ
கோயம்பத்தூர் மாப்ளே,
நிலாவே வா உனக்காக
நான் காலமெல்லாம் காத்திருப்பேன்,
நினைத்தேன் வந்தாய் நீ
என் நெஞ்சினிலே ,
தமிழனாய் நீ தந்தாய் ஒரு
புதிய கீதை,
அழகிய தமிழ் மகனாய்
பிரண்ட்சை குஷி படுத்தினாய்,
மதுர வந்தால்
கில்லி தாண்டு விளையாடும்
போக்கிரி நீ,
பெண்களை வசீகரப்படுத்தும்
மாண்புமிகு மாணவன் நீ,
மின்சாரக்கண்ணா உன்னைக்கண்டால்
பெண்களின்
துள்ளாத மனமும் துள்ளும்,
சிவகாசி நடத்திய லவ் டுடே
விளையாட்டில் சச்சினுக்கும் உனக்கும்
நடந்தது பந்தயம்,
சந்திரலேகாவை மணம்புரிய
பத்ரிக்கு நீ கொடுத்தது
செல்வ(ம்),
கண்ணுக்குள் நிலவாய்
திருமலையில் உதயமானாய்,
சுறாவை பிடிக்க நீ
வாங்கியது திருப்பாச்சி அருவா,
இப்போது மக்கள் மனதில்
வில் ( லு ) பிடித்து வேட்டைக்காரனாய்
மக்களை வழிநடத்தும் அரசியல்
காவல்க்காரனாய் ......
இப்படிக்கு
பிரியமானவளே ( மன்னிக்கவும் ) ப்ரியமுடன்
மானங்கெட்ட மனிதன்..........
இதெல்லாம் படிச்சிட்டு விஜய்யை புகழ்ற மாதிரி தெரிஞ்சா நீதாண்டா விஜயோட முதல் ரசிகன்
நண்பா டோமர் RoMy நீ இந்த பதிவுலகத்தில் இருப்பது எனக்கு தெரியாது, நீதான் நடிகர் விஜயின் மெய்க்காப்பாளன் என்றும் விஜய் ஆரம்பிக்க போகும் கட்சியின் முதல் வேட்ப்பாளன் என்றும் எனக்கு மட்டும் தான் தெரியும், இந்த விசயத்தை பதிவுலக நண்பர்களுக்கு தெரிவித்ததற்கு என்னை மனித்து விடு நண்பா,
என்னை ஒரு மானங்கெட்ட மனிதனாக மாற்றியதற்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தையை சொல்லி என் நன்றிக்கடனை தீர்க்க விரும்பவில்லை, உனக்கான என் பாராட்டுகள் தொடரும்.......
மவனே இனிமே comment போடுவ நீ , ஏன்டா டோமர் ROMY இவ்வளவு நேரம் படிச்சியே நான் உன்ன ஓட்டுனனா இல்ல திட்டுனனா ஏதாவது புரிஞ்சுதா...
verumpaye. thanks
சனி, 5 ஜனவரி, 2013
காமடி டைம்
போக்குவரத்து
துறையும் காவல் துறையும் இணைந்து மோட்டார்சைக்கிள் போட்டி நடத்தின. அதில் யார்
முதல் இடத்தை பிடிப்பார்களோ அவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று அறிவித்து போட்டி
துவங்கப்பட்டது அதில் ஒருவர் சாலை விதிகளை மீறாமல் அருமையாக ஒட்டி முதல் இடத்தில்
வந்தார். முதல் இடத்தில் வந்ததற்காக அவர்க்கு பணம் முடிச்சு வழங்கப்பட்டது. அவர்
அருகில் அவர் தந்தை, தாய், தம்பி ,இருந்தார்கள் அப்போது போக்குவரத்து ஆபீசர்
வியப்புடன் இந்த பரிசு தொஹையை என்னா!!செய்யபோகிறாய் என்று வினவினார் ! பயத்துடன்
அவர் தாய் இந்த பணத்தை வைத்து உடனே லைசென்சு எடு !! என்றார் உடனே அவர் தந்தை
தண்ணியை போட்டுவிட்டு ஓட்ட வேண்டாம் என்று சொன்னனே கேட்டியா! என்று அவர் கேட்க!
உடனே அவர் தம்பி திருட்டுவண்டி என்று தெருஞ்சு போச்சோ என்று கேட்க
மொத்தத்தில் போக்குவரத்து ஆபீசர் அதிர்ச்சி அடைந்தார் !!! ஹா !ஹா !! ஹா !!!
மொத்தத்தில் போக்குவரத்து ஆபீசர் அதிர்ச்சி அடைந்தார் !!! ஹா !ஹா !! ஹா !!!
வட்டார ஜோக்ஸ் !!!
பஸ் ஸ்டாப்பில் பஸ் நின்றது பஸ்சில் ஏறினார் அய்யாசாமி ! பஸ்சில் இருக்கையில்
அமர்ந்தார்.! அவர் அருகில் அவர் நண்பர் அம்ர்ந்திர்ருந்தார் என்ன !! நண்பா !! உன்
காலில் செருப்பை கானோம்! அதை ஏன் ! கேக்குகிறாய் நண்பா !! பஸ் நின்றதும் வீட்டில்
படிக்கட்டில் ஏரும் பழக்கத்தில்(யாபஹத்தில்) செருப்பை வெளியில் (ரோட்டில்) கிழட்டி
விட்டு பஸ்சில் ஏறிவிட்டேன்.ஹா! ஹா! ஹா !!
கடி டைம் !!

மாப்ளே?! குறள் ஓன்று சொல்லு கற்க ! கசடற ! கல்கண்டு ! குமுதம் ! கற்றபின் ! பாதி விலைக்கு! விற்க.! ஆஹா ! ஆஹா !
சீசன் ஜோக்ஸ்.

மகன் அப்பாகிட்டே எக்ஸாம் மார்க் சீட்டை காட்டினான் அதில் நூற்றுக்கு இருபது என்று இருந்தது அதற்க்கு அப்பா கோபப்பட்டு நீ! எண் மகேன இல்லை! என்று விரக்தியா கூறினார். ஐயோ! அப்பா இது DNA டெஸ்ட் இல்லை எக்ஸாம் மார்க் சீட். ஹா ! ஹா !ஹா !!
பட்டணத்து சிரிப்பு! ஹா!! ஹா ஹா!!!.
வட்டார
ஜோக்ஸ்: ஒரு "திருமண பந்தியில்" அந்த ஊர் வழக்கப்படி ஒரே ப்ளேட்டில் சாப்பிடுவது
வழக்கம் அதே போல் சாப்பாடு பரிமாறப்பட்டது அதில் பல வகை கறி கூட்டு இருந்தது அந்த
ஊர் வழக்கப்படி முதலில் ஈரல் கலந்த உருளைக்கிழங்கு பரிமாறப்பட்டது. ஆனால் அந்த
உருளைக்கிழங்கு கூட்டில் ஈரல் இல்லை, உடனே அவர்கள் என்ன மாப்ளே? ஈரல்துண்டை காணோம்!
போயி வெளியில் பாரு கொடியில் காய்கிறது. ஆஹா! ஆஹா!
ஆ! ஹா! ஹா!! சிரிப்பு நல்ல சிரிப்பு!!!!

1) என்னடா மினிஸ்டர் வருவார் என்று எல்லா மக்களும் எக்மோர் ரயில்வேஸ்டேஷன்நில் காத்து இருந்தோம்!! ஆனால் மினிஸ்டர் இங்கு இறங்காமல் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்நில் இறங்கிவிட்டார் ஏன்? ஒ! அதுவா அவர் சென்ட்ரல் மினிஸ்டர் ஆச்சே தான்!! ஹா! ஹா ஹா!!
2) "கபாலி.... நீ தினமும் ஸ்டேஷனுக்கு வந்து கையெழுத்து போடணும்னு சொன்னேனே.... ஏன் வரலை?" "எந்த ஸ்டேஷன்னு சொல்லாததால, ரயில்வே ஸ்டேஷனுக்குப் போயிட்டேன் ஏட்டய்யா...!" ஆ! ஹா! ஹா ஹா!!
சார் இங்குருந்து எக்மோர் ரயில்வே ஸ்டேஷன்க்கு எவ்வளவு நேரத்தில போஹலாம் நடந்து போனால் இருபது நிமிஷம் ஆஹும் நாய் துரத்தினால் ஐந்து நிமிஷத்தில் போஹலாம்
கடி ஜோக்ஸ்!!!!
என்னடா
ஷாப்பிங் மால்ல கடை வைதிருந்தியே! ஏன்? கடையை க்ளோஸ் பண்ணிட்டாய் மக்கள்கிட்ட மால்
(பணம்) இல்லையாம்!!என்னடா நேற்று ஷாப்பிங் மால்ல படம் பார்த்துவிட்டு தும்மிக்கிட்டே இருந்தாய்! இல்லைடா அது மசாலா படமாம்....ஹா ஹா கண்டிப்பா சிரிங்க.
அட வெங்காய ஜோக்ஸ்!!! 'ஆ' ஹா !ஹா ஹா!!
"பி.ஜே.பி. பொதுக் கூட்டத்துக்கு நல்ல கூட்டம் கூடியிருக்கே... "போஸ்டர்ல 'வெங்காய
நாயுடு பேசுகிறார்'னு போட்டுட்டாங்களாம்!""போலீஸ் வந்துருக்கு. ஏன் அவரும் ஸ்பெக்ட்ரம்ல ஊழலில் சம்பந்தப்பட்டிருக்காரா?" அட "நீங்க வேற! அவரு வீட்டுல தினமும் வெங்காய சாம்பார் பண்ணுறாராம்."
"பொண்ணு பார்க்க வந்தபோது மாப்பிள்ளை கேட்ட சமாச்சாரம் எங்களுக்கு அதிர்ச்சியாப் போச்சு!" "வரதட்சணை நிறைய கேட்டாரா?" "இல்லைங்க... வெங்காய பஜ்ஜி இருக்கான்னு கேட்டுட்டாரு!
"பேங்க்லேர்ந்து பணம் எடுத்துட்டுத் திரும்பி வரும்போது கொள்ளைக்காரங்க என் கவனத்தைத் திசை திருப்ப, நடுரோட்டுல...." "ரூபாய்த் தாளைப் போட்டிருந்தாங்களா?" "இல்ல.... வெங்காயத்தப் போட்டு இருந்தாங்க!"
"உங்க பொண்ணுக்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளை பெரிய பணக்காரராமே?""ஆமாங்க.. வெங்காய வியாபாரி!
கடி ஜோக்ஸ்!! கண்டிப்பா சிரிங்க ஹா ஹா!!
ஒரு
நோயாளி டாக்டரிடம் காட்டுவதற்காக மருத்தவமனைக்கு சென்று டாக்டர் அலுவலகத்தில்
உடம்பில் சட்டை இல்லாமல் அமருன்திருந்தார்!. அந்த வழியாக வந்த நர்ஸ் ஏன்? உடம்பில்
சட்டை இல்லாமல் அமர்ந்து இருக்கீங்கள் என்று வினவ! அதற்கு அந்த நோயாளி டாக்டரிடம்
உடம்பை காட்டிட்டு போகலாம் என்று வந்திருக்கிறேன் என்றார். ரொம்ப கடிச்சிட்டேன்
இல்லே!!ஹா ஹா!!கண்டிப்பா சிரிங்க.சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!!

கணவன்: குழந்தைக்கு மாட்டுப் பாலைக் கொடுக்காதே, தாய்ப் பாலைக் கொடுன்னு தலைபாடா அடிச்சிக்கிட்டேனே கேட்டியா?
மனைவி: ஏன், என்னாச்சு?
கணவன்: குழந்தை 'அம்மா.... அம்மா...'ன்னு கூப்பிட்டுக்கிட்டு மாடு பின்னாலேயே போகுது.
அவன்: என்னடா அந்த ஓட்டல் மட்டும் மத்தியானத்திலே மூடிடுறாங்க?
மற்றவன்: அதுவா, லஞ்ச் டயம் என்பதாலே அங்க வேலை செய்யறவங்க எல்லாம் வெளியே சாப்பிடப் போயிடுவாங்க.
கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?
மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடுபோட்டு கொடுங்க சாமி!
கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.
மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கணும், எதையும் வாங்கித் தரச்சொல்லிக் கேட்கக்கூடாது...
கடவுள்: சரி சரி.. அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா..?!!
அந்த வீட்ல இப்பல்லாம் மாமியார் மருமகள் சண்டை போடுற சத்தமே காணோமே! சமரசம் ஆயிட்டாங்களா?" "நீங்க ஒண்ணு... சண்டை போடுறதுக்குன்னே ஒரு ஏ.சி.ரூம் தயார் பண்ணிட்டாங்க!"
"என் உயிரைக் காப்பற்றிய நர்சையே நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்." "எப்படிக் காப்பாத்தினா?" "ஆபரேசன் ரூமிலேயிருந்து பின்வழியா என்னைத் தப்பிச்சிப் போக வச்சது அவதான்!"
May 30, 2011
வைகை புயல் வடிவேலு ஜோக்ஸ்!!
தேர்தலுக்கு முன் வடிவேலுவிடம் கட்சிக்காரர்:
"வைகைப் புயல் சார்..! நீங்கதான் இந்த தேர்தல்ல எங்களுக்கு பிரசார பீரங்கி..!"
தேர்தல் முடிவிற்குப் பின் வடிவேலு: இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உள்ள போட்டிருக்கிற ட்ரவுசர அத்து வுட்டுடானுங்களே!
* வடிவேலு: ஹலோ.. நான் வட்ட செயலாளர் வண்டு முருகன் பேசறேன்...
எதிர்முனை: நீ வட்ட செயலாளரா இரு.. சதுர செயலாளரா இரு... இன்னும் கொஞ்ச நேரத்துல அட்ரஸ் இல்லா செயலாளரா ஆகப் போற...
வடிவேலு: மனதிற்குள்.. பாடி ஸ்ட்ராங்கு.. பேஸ்மெண்ட் வீக்குங்கறதை பயபுள்ள கண்டுபிடிச்சிட்டானோ...
* "சாதாரணமா அடிச்சா கூட பரவாயில்லையே.. இவன் வேற புள்ளி விவரம் சொல்லி இல்ல அடிப்பான்...
கைப்புள்ள... நீ கதறப் போற கைப்புள்ள..!" "மாப்பு... மாப்பு... அய்யோ மாப்பு.. அஞ்சி வருஷத்துக்கு வச்சிட்டாங்களே ஆப்பு..!"
* வடிவேலு: அதிமுக கூட்டணி ஜெயிச்சாலும் ஜெயிச்சது... அடிவாங்க இங்க வா, அங்க வா...ன்னு அழைப்பு மேல அழைப்பா விடுறாய்ங்க... நானும் எவ்வளவு நாள்தான் அடி வாங்காத மாதிரியே நடிக்கறது...
சிங்கமுத்து: அரசியல்னு வந்துட்டா இதெல்லாம் சகஜம்டி மாப்பு... போடி மாப்ள... வச்சிருக்காங்க உனக்கு ஆப்பு...
அரசியல் ஜோக்ஸ் கொஞ்சம் சிரியுங்கள் !!!
"ஜனங்கள்ல
இன்னும் நிறைய பேர் ஏமாளியாதான் இருக்காங்கன்னு எப்படிய்யா சொல்றே...?" "இந்தத்
தேர்தல்லயும் உங்களுக்கு ஆயிரத்து சொச்சம் ஓட்டு போட்டிருக்காங்களே
தலைவரே!"*"அரசியல் கட்சித் தொண்டரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது பெரிய வம்பாப் போச்சு." "என்ன பண்றாரு?" "சாப்பாடு வச்சி, குழம்பு கொண்டு வர்றதுக்குள்ளே 'சோறு இங்கே. குழம்பு எங்கே?'னு கோஷம் போட ஆரம்பிச்சிடுறாரு!"
*"பதவி பெரிசா.... குடும்பம் பெரிசான்னு தலைவர்கிட்ட கேட்டதுக்கு, என்ன சொன்னார்?" "பதவியில் இருக்கிற குடும்பம்தான் பெரிசுன்னு சொன்னார்!"
*"தலைவர் ரொம்பத்தான் பயந்து போயிருக்கார்!" "எப்படிச் சொல்றே?" "நல்லா இருக்கீங்களானு விசாரிச்சாகூட, நான் எந்தத் தப்பும் பண்ணலைங்கறார்!"
*"மக்களோட தான் என்னோட கூட்டணின்னு தலைவர் மேடைக்கு மேடை பேசினது தப்பா போச்சு....!" "ஏன்... என்ன ஆச்சு...?" "தலைவர் எங்கே போனாலும், 'தேர்தல் நெருங்கிடுச்சி, வாங்க தொகுதி பங்கீடு பத்தி பேசலாம்'னு மக்கள் அவரை சூழ்ந்துக்கறாங்களாம்...!"
தேர்தல் ஜோக்ஸ் கொஞ்சம் சிரியுங்கள் !!!
மார்ச்
23,: 63 தொகுதிக்கு பின்னும் கட்சிக்குள்ள பேச்சு வார்த்தை நடக்குதாமே..." "மொத்தம்
கட்சியிலே 9 கோஷ்டி இருக்கே.. ஒரு கோஷ்டிக்கு ஒன்பது தொகுதிகள் கேட்டு பேச்சு
வார்த்தை நடந்துக்கிட்டு இருக்கு...."* தலைவர் டெல்லிக்குப் போய் தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினாரே..அங்கே என்ன மொழியிலே பேசியிருப்பார்..." "அவங்க சொல்றதெல்லாம் புரியாம.. மௌனமாகவே இருந்திருக்கார்.. மௌனம் சம்மதத்திற்கு அறிகுறின்னு நினைச்சு.. பேச்சுவார்த்தை வெற்றின்னு அவங்க அறிவிச்சுட்டாங்க..."
* சரத்குமாருக்கு இரண்டு தொகுதியை ஜெ ஒதுக்கி இருக்காரே..." "இரண்டாவது யார்..?"
* இந்த தேர்தல்ல யார் ஜெயிச்சு ஆட்சி அமைப்பாங்கன்னு நினைக்கறே..?" "யார் ஜெயிச்சு ஆட்சி அமைப்பாங்கன்னு தெரியாது.. ஆனா யார் தோப்பாங்கன்னு தெரியும்.. ஜனநாயகம் தோற்கும்."
* காங்கிரஸ் ஏன் 63 தொகுதிகள் கேட்டங்களாம்...?" "ஜெ தான் கூட்டுத்தொகை 9 வரமாதிரி கேட்கச் சொன்னாங்களாம்."
ராமதாஸ் தனக்கு ஒதுக்கிய தொகுதியில் இருந்து ஒரு தொகுதியை எப்படி விட்டுக் கொடுத்தார்." "ஒரு ராஜ்ய சபா உறுப்பினர் கேட்டாப்போல மேலவைல ஒரு சீட் அவர் சொல்றவருக்குத் தரதா கலைஞர் சொல்லி இருப்பார்."
நாட்டுல எவ்வளவு ஜாதிகள் இருக்கு..." "ஒரு சீட், இரண்டு சீட் வாங்கின கட்சியெல்லாம் லிஸ்ட் எடுத்துப் பார்.. தெரிஞ்சிடும்.
சீசன் ஜோக்ஸ் கொஞ்சம் சிரிசிடுங்கள் !!!
ஆபீசில்
வேலை பார்ப்பவர் கையில் கட்டு, காலில் கட்டு போட்டு கொண்டு கொஞ்சம் லேட்டாக
ஆபீசிக்கு வந்தார். மேனேஜர் ஏன்? லேட்டு என்று அவரிடம் விசாரித்தார். அதற்க்கு அவர் சார் நம்ம "ஆபீஸ் தெரு முனைல" ஒரு பெரிய பள்ளம் இருக்குத்தில்லையா? ஆமாம் பார்த்தேன்! நான் பார்கள சார்!!
மாலை டைம்!! சிரியுங்கள் !!!

வேலைக்காரர்: எஜமானி அம்மாவிடம் சொன்னார் இன்னையோட நான் வேலையை விட்டு நிக்கபோறேன்மா என்று!
எஜமானி அம்மா: ஏன்? என்ன? ஆச்சு !
வேலைக்காரர்: அதை ஏன்மா கேட்கிறீங்க! அய்யா ஜபமாலை வாங்க சொன்னாரு! நானும் வாங்கிவந்தேன். உடனே அதை பூஜை அறைக்கு எடுத்துக்கொண்டு போய் எண்ண ஆரம்பிச்சிட்டாரு! நான் என்ன பொய்யா சொல்லபோறேன். திரும்பிவந்து சரியா இருக்கு என்று சொல்கிறார்.
சட்டம் ஒரு இருட்டறை! சிரியுங்கள்!
ஒரு நண்பன் மற்றொரு நண்பனிடம் என்ன நண்பா! ரொம்ப அவசரமா கையில் டார்ச் லைட்டோடோ
நடக்கிறாய் உன்னக்கு தெரியாத இன்னிக்கு கோர்ட்டிலே கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு.
அது சரி அதுக்கு எதுக்கு கையில் டார்ச் லைட்டோட போற! அட சட்டம் ஒரு இருட்டறையாச்சே
அது உனக்கு தெரியாதா?.*பசிக்காக திருடுபவனுக்கு இருட்டறையில் சிறை! 176 லட்சம் கோடி திருடுபவனுக்கு ஏசி அறையில் சிறை! அதபோல் விபத்து என்று கமிஷன் சொல்லும் நபர்களுக்கு தூக்கு 5000 க்கும் அதிகமான அப்பாவி மக்களை கொன்றவர்களை பல்லாக்கில் தூக்கு! சட்டம் ஒரு இருட்டறை மட்டும்மல்ல சிரிப்பரையும் கூட (காவி அறையும் கூட). சிரியுங்கள்!!! சிந்தியுங்கள்!!
சீசன் ஜோக்ஸ் !!!
காதலன்!! தன் காதலியிடம் சொன்னான் "இதோ பாரு" உங்கள் வீட்டில் நம்ம காதல்
கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டர்கள் பேசாமே நம்ம இரண்டு பெரும் "ஊரை விட்டு
ஓடிப்போய் கல்யாணம் பண்ணிகிடலாம்" என்று சொன்னான். உடனே!! அந்த பெண்ணுக்கு ரொம்ப
கோபம் வந்து "செறுப்பு பிஞ்சி போயிவிடும்" என்று சொன்னாள். அதற்கு அவள் காதலன்
சொன்னான் நம்ம ஓடும்பொழுது ஏன் ! செருப்புபோட்டு ஓடனும் செருப்பை கையில்
எடுத்துக்கிட்டு ஓடலாம்.!! ஹா !! ஹா !! ரொம்ப கடிச்சிட்டேன் இல்ல, சும்மா சிரிங்க!!
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்!!!
அமெரிக்காவில்
Power Cut ஆன,அவங்க EB க்கு போன் பண்ணுவாங்க !
ஜப்பானில் Power Cut ஆன,
அவங்க Fuse போயிருக்கா ! அப்படின்னு செக் பண்ணுவாங்க !
-ஆனால்
இந்தியாவில் Power Cut ஆன,
என்ன பண்ணுவாங்கன்னு தெரியுமா?
முதல்ல பக்கத்து வீட்டை
செக் பண்ணுவாங்க !
காதலர்கள் டைம் ப்ளீஸ் சிரியுங்கள் !!!
*
டேய் மச்சான்! நான் ஊமையா நடிச்சு பழகின ஃபிகரும், ஜோக்கடிச்சு நூல் விட்ட
ஃபிகரும், ஒண்ணா வர்றாங்க... எப்படி அப்ரோச் பண்றதுன்னே புரியலடா?!* காதலி: "நாம எப்பவும் சண்டை போடாம சந்தோஷமா ஒத்துமையா இருக்கணும்..." காதலன்: அப்ப... கல்யாணம்... செய்துக்க வேண்டாம்ங்கிறே! உன் விருப்பம்!"
* மாலா இன்னிக்கு மட்டும் என்னோடு பீச்சுக்கு வா.... உன்னைத் தொடமாட்டேன். கமெண்ட் அடிக்க மாட்டேன். சில்மிஷம் பண்ணமாட்டேன்" "அப்புறம் பீச்சுக்கு எதுக்கு?"
* வாழ்க்கையில சில விஷயங்கள் நடக்காமல் இருந்தால் நல்லா இருக்கும்!" "நாம காதலிச்சதைச் சொல்றேளா?" இல்லே! நம்ம கலியாணம் நடக்கப் போறதைச் சொல்றேன்!"
* மூணு மாசமா பின்னாடி சுத்தறானே... இவன் காதலை ஏத்துக்கலாமா, கூடாதான்னு நீ குழம்பறது ஹார்ட்டுக்கு கெடுதலாம்... ஹெல்த்தியா இருக்கறதுக்காகவாவது என்னோட காதலை ஏத்துக்க ரம்பா ப்ளீஸ்...."
வட்டார ஜோக்ஸ் !!!
இரு நண்பர்கள் பேசி கொண்டார்கள் மாப்ளே!! நான் எவ்வளவோ டாக்டரிடம் காட்டிவிட்டேன்
கொஞ்சம் கூட என் உடம்பு குறைய வில்லை அதற்கு ஒரு வலி சொல் மாப்ளே! கவலை படாதே! நான்
ஒரு யோசனை சொல்கிறேன் நான்கு பேரிடம் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக !சொல்லி பணத்தை
வாங்கு நீ அந்த பணத்தை செலவு செய்து விடு ஒரு மாதம் கழித்து பார் உனக்கே புரியும்
எப்படி நீ ஒவ்வொரு வேலையும் சாப்பிடும் பொழுது, நீ சாப்பாட்டில் கையை வைக்கும்
பொழுது, உன்னிடம் பணம் கொடுத்தவர்கள் உன் வீட்டு கதவை தட்டும் பொழுது, உனக்கு
ஏற்படும் அதிர்ச்சியில் வலியில், கவலையில் உன் உடம்பு தானாலே குறைந்து விடும். ஹா
!! ஹா !!
சீசன் ஜோக்ஸ் !!!
மகன் அப்பா கிட்டே நான் புதுசா ஒரு மோட்டர் சைக்கிள் வாங்கி வந்துள்ளேன் அப்பா!!
அப்படியா! மகனே என்னா நம்பர்? TNZ 3031 அட மடையா! யான்டா முதல் தேதி இரண்டாம் தேதி
பார்த்து வாங்காமல் மாத கடைசி நம்பரை பார்த்து வாங்கி ...வந்திருகே ஹா !! ஹா !!
பஞ்ச் டயலாக் !!!
இரு
நண்பர்கள் பேசி கொண்டார்கள் அதில் ஒரு நண்பர் ரஜினிகாந்து சாப்ட்வர் இஞ்சினியராக
இருந்தால் எப்படி பஞ்ச் டயலாக் பேசி இருபார் தெரியுமா? என்று கேட்டார்.மற்றொருவர்
தெரியலையே சொல்லு என்றார். இப்படித்தான் ... கண்ணா !! இக்கட சூடூ ஐயம் மிஸ்டர்
ஜாவா!! நான் ஒரு அடிவிட்டேன் நீ போய் விழும்மிடம் காவா!! ஆபீசுக்கு லேட்டா
வந்தாலும் லேட்டஸ்ட் சாப்ட்வேரோடு தான் வருவேன். கண்ணா !! வைரஸ் மட்டும் தான்
கூட்டம், கூட்டம்மாக வரும் ஆனால் ஆண்டி வைரஸ் எப்பவும் சிங்கிலாத்தான் வரும். நான்
பார்கத்தான் ஹார்ட்வேர் மாதிரி ஆனால் மனசு சாப்ட்வேர். இது எப்படி இருக்கு !!! ஹா!
ஹா! ஹா!
சீசன் ஜோக்ஸ் !!!
!*இரு
நண்பர்கள் ரொம்ப நாளைக்கு பிறகு சந்தித்து கொண்டார்கள் என்ன நண்பா! காதலித்து
கல்யாணம் பண்ணிகொண்டாயே! உன் வாழ்கை எப்படி உள்ளது அதை ஏன்? கேக்குகிராய் நண்பா!
என் மனைவி சாமிகிட்டே போய் சேந்துட்டாள். அவர் நண்பர் வருத்ததுடன் ஐயோ!
பாவமே!என்னா? நடந்தது நண்பா! எதிர் வீட்டு அய்யாசாமி கூட ஓடி போய்விட்டாள். ஹா !! ஹா!

ஒரு பெண்! நாயகன் சினிமாவில் வருவது போல் என்னை காப்பாத்துங்கள்! என் தாலிக்கு ஆபத்து! என் தாலிக்கு ஆபத்து!! என்று அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்தாள்!! அங்கு நின்றவர்கள் என்னமா? உன் கணவருக்கு என்னா ஆச்சு! என்று விசாரித்தார்கள். அதற்கு அந்த அம்மா! என் கணவர் குடித்துவிட்டு என் தாலியை பரிபதற்கு துரத்திக்கொண்டு வருகிறார். அங்கு நின்றவர்கள் அட இதுதானா!! நாங்கள் எதோ உன் கணவருக்கு எதோ ஆச்சோ என்று.!!! ஹா! ஹா!!
வரலாற்றில் ஒரு ஏடூ!!

ஒரு நண்பன் ஒரு முதியவரிடம் அய்யா ! ஒரு சந்தேகம்? என்ன உன் சந்தேகம் பகுத்தறிவு என்றால் என்ன? விதி என்றால் என்ன ? அப்படியா ! சரி உன் வலது காளை தூக்கு என்றார் அவனும் வலது காளை தூக்கினான். இப்போ வலது காளை இறக்காமல் இடது காளை தூக்கு என்றார் அவனும் தூக்கினான் ஆனால் பொத்து என்று கிழே விழுந்துவிட்டான். அப்பொழுது அந்த முதியவர் சொன்னார் உன்னால் ஒரு காளை தூக்க முடிந்தது. அதுதான் பகுத்தறிவு இரண்டு காளையும் ஒரே சமையத்தில் தூக்கினாய் அடிபட்டது அது தான் விதி.
அவனும் விதிய நினைத்துகொண்டே இடுப்பை பிடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்.!!! ஹா !! ஹா !!!
கலவை பாதி!! பயணம் பாதி!! கலந்த செய்த ஜோக்ஸ் நான்!!! சிரியுங்கள் ப்ளீஸ்!!!
நிச்சயம்
பயணம் வரும்!! நீ ஒரு நாள் புறபடுவாய்!! நேசர் எல்லாம் வழி அனுப்ப!! நீ சவூதியாவில்
ஏறிடுவாய் !! அஞ்சாத அரபி முன்னே அடங்கி ஒடுங்கி வேலை செய்வாய் !! கான்ட்ராக்ட்
முடிந்தவுடன் ஓன்வேயில் வந்துவிடுவாய் ! இந்த நிலை அறியாமல் நீ பம்பாயில்
சுற்றுகிறாய்!!! ஹா !ஹா!!
ராசா டைம் !!!

* வாத்தியார் மாணவனிடம் தஞ்சாவூரை ஆண்ட பழைய ராஜாவின் பெயர் தெரியுமா? தெரியாது சார் !சரி மதுரையை ஆண்ட பழைய ராஜாவின் பெயர் தெரியுமா ? தெரியாது சார் எனக்கு தெரிந்த ஒரே ராஜா ஸ்பெக்ட்ரம் ராசா சார் !! ஹா! ஹா !!
*"மன்னர் அந்த ஆளுக்கு பத்துக் கசையடிகள் கொடுக்கச் சொல்கிறாரே, ஏன்?" "ராஜா என்று அழைப்பதற்கு பதிலாக 'ராசா' என்று சொல்லிக் கேவலப்படுத்தி விட்டாராம்!"
*"தலைவர் அப்பாவி மாதிரி நடிக்கிறாரே..?" "ஆமாம்! ஸ்பெக்ட்ரம்னா என்னன்னு கேட்கிறாரே?"
*"தலைவரே! 'அந்த 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி ஊழல்'னு மேடையில திட்டிப் பேசினீங்களே... அது 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி!" "இவ்வளவு நாளைக்கு வட்டி போட்டுக் கூட்டிப் பாரு கணக்கு சரியா வரும்!"
*'மரியாதை நிமித்தமா என்னைச் சந்திக்க வந்தாங்க'னு ராசா சொல்றதை என்னால் நம்ப முடியலை!" "யாரை அப்படிச் சொல்றாரு?" "சி.பி.ஐ அதிகாரிகளைத்தான்!"
*"அந்த குடிகாரன் ரொம்ப அப்பாவியா இருக்கானே!" "டாஸ்மாக்குல போயி புதுசா வந்திருக்கிற 'ஸ்பெக்ட்-ரம் இருக்கான்னு கேக்கறானே!"
*அரசியல்லயும் 'ராகிங்'கா என்னய்யா சொல்றே..?" "புதுசா கட்சி தொடங்கின தலைவரைப் பார்த்து ஆ.ராசா மாதிரி நடந்து காட்டச் சொன்னாங்களாம்!"
*நமது ராஜா ரொம்பவும் வருத்தத்தில் இருக்கிறாரே ஏன்?" "ராசாவா.... பிறக்கவில்லையே என்கிற வருத்தம்தான்!"
சீசன் ஜோக்ஸ் !!!
நான்
மெஸ்சில் சாப்பிடுவது வழக்கம் அன்று இரவு மெஸ்சில் சாப்பிடுவதர்க்காக அந்த வழியாக
சென்று கொண்டு இருக்கும் பொழுது!! மெஸ்சில் சாப்பிட்டுவிட்டு! நண்பர் ஒருவர் கீழே
இறங்கி வந்து கொண்டிருந்தார். அவரிடம் ராமு மேலே என்ன போட்டு இருக்கிறார்? என்று
கேட்டேன் அதற்கு அவர் வழக்கம் போல் பணியன் தான் போட்டு இருக்கிறார்! என்று
சொன்னார். (ஆனல் நான் விசாரித்தது சாப்பாட்டை பற்றி ). ஹா !! ஹா!!
Feb 1, 2011
வட்டார ஜோக்ஸ் ! சும்மா சிரிச்சி வையுங்கள்!!
இரு
நண்பர்கள் வெளிநாடு போஹுவதர்க்காக பம்பாய் சென்று இண்டர்விவ் அட்டெனன்ட்
பன்னுவதர்காக டிராவல் அலுவலகத்தில் அமர்ந்து இருந்தார்கள் இண்டர்விவ் வைப்பவர்
அவர்களை பார்த்து ஆப்க்கூ ஹிந்தி மாலும்ஹே? !! அதற்கு அவர்கள் (அவர்களுக்கு ஹிந்தி
தெரியாது ) மாளாது ! அண்ணே! மாளாது !! ஒருக்காலும் மாளாது !! என்று பதில் அளித்தனர்
.அஹ் ! ஹா !! ஹா ! ஹா !!!அதே இரு நண்பர்களும் இண்டர்விவ் முடிந்து அன்று இரவில் ஒரு விடுதியல் தங்கிவிட்டு அதிகாலை ஜன்னல் ஓரமாக எட்டிபார்தார்கள் பக்கத்தில் கட்டுமான வேலை நடந்துகொண்டு இருந்தது அதில் இரு கொத்தனார்கள் ஹிந்தில் பேசிகொண்டு இருந்தார்கள் அவர்கள் உடனே
தலையில் அடித்துக்கொண்டு கொத்தனார்க்கு கூட ஹிந்தி தெரியுது நமக்கு தெரியலை என்று கூறிக்கொண்டனர்.(ஆனால் கொத்தார் அந்தவூர் வாசி என்று அவர்களுக்கு புரியாமல் போனது ) ஹா ! ஹா !!
சீசன் ஜோக்ஸ் !!!
ஒரு
மளிகை கடையில் ஒரு வாடிக்கையாளர் சாமான்கள் வாங்குவதற்காக வந்து அய்யா! மல்லி
இருக்கா? என்று கேட்டார்! கடைகாரர் இல்லை என்றார். வாடிக்கையாளர் பூண்டு இருக்கா?
என்று கேட்டார்! கடைகாரர் இல்லை என்றார். வாடிக்கையாளர் இஞ்சியாவது இருக்கா
என்றார்? கடைகாரர் இல்லை என்றார். பூட்டு சாவி இருக்கா? ஓ!! இருக்கே!! அப்போ கடையை
பூட்டிட்டு வீட்டுக்கு போயா என்றார். ஒ ரொம்ம கடிச்சிட்டேன் இல்லை. ஹா! ஹாஹா! ஹா!
சிரிங்க.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

