ராமராஜன் : ஏன்னே, எனக்கு என்ன கல்யாண ஊர்வலமா நடத்துறிங்க?
கவுண்டமணி : ஊர்வலம் விட்ற நேரம் வந்தாச்சுல,அதான் ஒத்திகை பார்த்துகிட்டு இருக்கோம்.
ராமராஜன் : வண்டிய வித்துடுங்கன்னாலும்,விக்க மாட்றீங்க, மானத்த வாங்குறீங்க!
கவுண்டமணி :அது என்ன தம்பி அப்டி சொல்லிபுட்ட! இந்த கார யார் யார் வச்சிருந்தாங்க தெரியும்ல!
ராமராஜன் : யார் யாரு?
கவுண்டமணி : மால்துரை மஹாராஜா வச்சிருந்தாரு,திருவனந்தபுரம் ஐரஸ் வச்சிருந்தாரு,ஹைதரபாத் நிஜாம் வச்சிருந்தாரு,
அதுக்கப்புறம் ஒரு மந்திரி வச்சிருந்தாரு,எம்.எல்.ஏ வச்சிருந்தாரு,அதுக்கப்புறம் சினிமா கவர்ச்சி நடிகை சொப்பன சுந்தரி வச்சிருந்தா,
அதுக்கப்புறம் இந்த காரை நம்ம வச்சிருக்குறோம்.
செந்தில் : பளீர்,ஆங்க்க்க்
ராமராஜன் : ஏன் அடிச்சீங்க?
கவுண்டமணி : ஏன் அடிச்சேனா! அவன் என்ன கேள்வி கேட்டான்?
ஏண்டா என்னபார்த்து ஏண்டா அந்த கேள்வி கேட்ட?
தள்டா..
அது ஏண்டா என்ன பார்த்து அந்த கேள்வி கேட்ட?இத்தனை பேர் இருக்காங்களே கேட்ககூடாதா..தள்றா..
அய்யோ..!!! ஏண்டா என்ன பார்த்து அந்த கேள்வி கேட்ட ?
ராமராஜன் : ஏன்னே, அவன அடிச்சிகிட்டே இருக்கிங்க? அப்டி அவன் என்னதான் கேட்டான்?
கவுண்டமணி : என்ன கேட்டானா?
காரை நம்ம வச்சிருக்குறோம்,இந்த காரை வச்சிருந்த சொப்பனசுந்தரிய இப்ப யாரு வச்சிருக்கான்னு கேக்குறான்?
அவள யார் யார் வச்சிருக்காங்கன்னு கணக்கெடுக்குறதா என் வேலை?இல்ல இதுக்கு முன்னால அந்த வேலை பார்த்துகிட்டு இருந்தேனா?
ஒரு வித்வான பாத்து கேக்குற கேள்வியாய இது? பாரு கேக்குறதையும் கேட்டுபுட்டு நையா பைசாவுக்கு ப்ரயோஜனம் இல்லாதவன் மாதிரி
நிக்கிறான்..தள்றா...
ராமராஜன் : அத விட்டு தொலைங்க்ன்னேன்,முதல்ல வண்டிய சரி பண்னுங்க!
கவுண்டமணி : என்னத்த சரி பண்றது ,பெட்ரோல் விலை ஏறிப்போச்சேன்னு மண்ணென்னெய் ஊத்தினேன்,மண்ணென்னெய் விலையும் ஏறிப்போச்சேன்னு க்ரூட் ஆயில் ஊத்தினேன்,இப்ப எந்த ஆயில்ல ஓடுதுன்னு அதுக்கும் தெரியல எனக்கும் தெரியல..
அட அதெல்லாம் இருந்தும் நாம ஏன் கார வச்சிருக்கோம்னா,இப்டில்லாம் ஒரு பந்தா வேணும்பா !!
இந்தியாவுலையே ஏன் இந்த வோர்ல்ட்லேயே காரு வச்சிருக்குற கரகாட்ட கோஷ்டி அது நம்ம கோஷ்டிதான் !!
செந்தில் : அதுவும் அம்பாசெட்டர் காரு..
கவுண்டமணி : அடி,அம்பாசெட்ரு காரா இவ்ளோ நீளமா இருக்கு?
செந்தில் : அப்ப லாரி..
கவுண்டமணி : லாரியா? புட்ற அவன
செந்தில் : அய்யோ அடிக்கிறாரே ,அடிக்கிறாரெ:)
குள்ளமணி : பழைய இரும்புச்சாமான்,ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்,பழைய இரும்புச்சாமான்,ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்.
கவுண்டமணி : டெய் ஏண்டா இந்த வண்டிய பார்த்து பேரிச்சம்பழம்,பேரிச்சம்பழம்னு கத்துற?இந்த வண்டி என்ன பேரீச்சமபழத்துக்கு போடுற மாதிரியா டா இருக்கு?
என்ன கிண்டலா?மூஞ்சிலே குத்துவேன்
குள்ளமணி : அட நீங்க ஒன்னு, நான் ஏன்னே கிண்டல் பன்ன போறேன்? நான் வியாபாரின்னேன்!
கவுண்டமணி : ஆமா இவர் பெரிய கப்பல் வியாபாரி ! போடா..
செந்தில் : அண்ணேன் அன்னேன் பேரிச்சம்பழம் சாப்ட்டு ரொம்ப நாளாச்சுன்னேன்.
கவுண்டமணி : அதுக்காக பேரிச்சம்பழத்துக்கு கார போடலாங்குறியா?
ஆஃப்ட்ரால் ரெண்டு பேரிச்சம்பழத்துக்கு இவ்ளோ காஸ்ட்லியான கார போடலாம்குற
செந்தில் : தள்ள முடியலன்னேன்...!
கவுண்டமணி : அதுக்கு இவங்கிட்ட தள்ளிவிட்றலாம்-குறியா?
ராமராஜன் : என்னன்னேன் வந்த இடத்துல அலம்பல் பண்ணிகிட்டு, நீ போப்பா..
குள்ளமணி : பழைய இரும்புச்சாமான்,ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்,பழைய இரும்புச்சாமான் ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்
கவுண்டமணி : டொம்..டங்க்,டொம்...:) உதைத்து தள்ளுகிறார்.
வசனம் முடிந்தது:))))))
.mazhai. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக