
கணவன்: குழந்தைக்கு மாட்டுப் பாலைக் கொடுக்காதே, தாய்ப் பாலைக் கொடுன்னு தலைபாடா அடிச்சிக்கிட்டேனே கேட்டியா?
மனைவி: ஏன், என்னாச்சு?
கணவன்: குழந்தை 'அம்மா.... அம்மா...'ன்னு கூப்பிட்டுக்கிட்டு மாடு பின்னாலேயே போகுது.
அவன்: என்னடா அந்த ஓட்டல் மட்டும் மத்தியானத்திலே மூடிடுறாங்க?
மற்றவன்: அதுவா, லஞ்ச் டயம் என்பதாலே அங்க வேலை செய்யறவங்க எல்லாம் வெளியே சாப்பிடப் போயிடுவாங்க.
கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?
மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடுபோட்டு கொடுங்க சாமி!
கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.
மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கணும், எதையும் வாங்கித் தரச்சொல்லிக் கேட்கக்கூடாது...
கடவுள்: சரி சரி.. அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா..?!!
அந்த வீட்ல இப்பல்லாம் மாமியார் மருமகள் சண்டை போடுற சத்தமே காணோமே! சமரசம் ஆயிட்டாங்களா?" "நீங்க ஒண்ணு... சண்டை போடுறதுக்குன்னே ஒரு ஏ.சி.ரூம் தயார் பண்ணிட்டாங்க!"
"என் உயிரைக் காப்பற்றிய நர்சையே நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்." "எப்படிக் காப்பாத்தினா?" "ஆபரேசன் ரூமிலேயிருந்து பின்வழியா என்னைத் தப்பிச்சிப் போக வச்சது அவதான்!"
May 30, 2011
வைகை புயல் வடிவேலு ஜோக்ஸ்!!

தேர்தல் முடிவிற்குப் பின் வடிவேலு: இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உள்ள போட்டிருக்கிற ட்ரவுசர அத்து வுட்டுடானுங்களே!
* வடிவேலு: ஹலோ.. நான் வட்ட செயலாளர் வண்டு முருகன் பேசறேன்...
எதிர்முனை: நீ வட்ட செயலாளரா இரு.. சதுர செயலாளரா இரு... இன்னும் கொஞ்ச நேரத்துல அட்ரஸ் இல்லா செயலாளரா ஆகப் போற...
வடிவேலு: மனதிற்குள்.. பாடி ஸ்ட்ராங்கு.. பேஸ்மெண்ட் வீக்குங்கறதை பயபுள்ள கண்டுபிடிச்சிட்டானோ...
* "சாதாரணமா அடிச்சா கூட பரவாயில்லையே.. இவன் வேற புள்ளி விவரம் சொல்லி இல்ல அடிப்பான்...
கைப்புள்ள... நீ கதறப் போற கைப்புள்ள..!" "மாப்பு... மாப்பு... அய்யோ மாப்பு.. அஞ்சி வருஷத்துக்கு வச்சிட்டாங்களே ஆப்பு..!"
* வடிவேலு: அதிமுக கூட்டணி ஜெயிச்சாலும் ஜெயிச்சது... அடிவாங்க இங்க வா, அங்க வா...ன்னு அழைப்பு மேல அழைப்பா விடுறாய்ங்க... நானும் எவ்வளவு நாள்தான் அடி வாங்காத மாதிரியே நடிக்கறது...
சிங்கமுத்து: அரசியல்னு வந்துட்டா இதெல்லாம் சகஜம்டி மாப்பு... போடி மாப்ள... வச்சிருக்காங்க உனக்கு ஆப்பு...
அரசியல் ஜோக்ஸ் கொஞ்சம் சிரியுங்கள் !!!

*"அரசியல் கட்சித் தொண்டரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது பெரிய வம்பாப் போச்சு." "என்ன பண்றாரு?" "சாப்பாடு வச்சி, குழம்பு கொண்டு வர்றதுக்குள்ளே 'சோறு இங்கே. குழம்பு எங்கே?'னு கோஷம் போட ஆரம்பிச்சிடுறாரு!"
*"பதவி பெரிசா.... குடும்பம் பெரிசான்னு தலைவர்கிட்ட கேட்டதுக்கு, என்ன சொன்னார்?" "பதவியில் இருக்கிற குடும்பம்தான் பெரிசுன்னு சொன்னார்!"
*"தலைவர் ரொம்பத்தான் பயந்து போயிருக்கார்!" "எப்படிச் சொல்றே?" "நல்லா இருக்கீங்களானு விசாரிச்சாகூட, நான் எந்தத் தப்பும் பண்ணலைங்கறார்!"
*"மக்களோட தான் என்னோட கூட்டணின்னு தலைவர் மேடைக்கு மேடை பேசினது தப்பா போச்சு....!" "ஏன்... என்ன ஆச்சு...?" "தலைவர் எங்கே போனாலும், 'தேர்தல் நெருங்கிடுச்சி, வாங்க தொகுதி பங்கீடு பத்தி பேசலாம்'னு மக்கள் அவரை சூழ்ந்துக்கறாங்களாம்...!"
தேர்தல் ஜோக்ஸ் கொஞ்சம் சிரியுங்கள் !!!

* தலைவர் டெல்லிக்குப் போய் தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினாரே..அங்கே என்ன மொழியிலே பேசியிருப்பார்..." "அவங்க சொல்றதெல்லாம் புரியாம.. மௌனமாகவே இருந்திருக்கார்.. மௌனம் சம்மதத்திற்கு அறிகுறின்னு நினைச்சு.. பேச்சுவார்த்தை வெற்றின்னு அவங்க அறிவிச்சுட்டாங்க..."
* சரத்குமாருக்கு இரண்டு தொகுதியை ஜெ ஒதுக்கி இருக்காரே..." "இரண்டாவது யார்..?"
* இந்த தேர்தல்ல யார் ஜெயிச்சு ஆட்சி அமைப்பாங்கன்னு நினைக்கறே..?" "யார் ஜெயிச்சு ஆட்சி அமைப்பாங்கன்னு தெரியாது.. ஆனா யார் தோப்பாங்கன்னு தெரியும்.. ஜனநாயகம் தோற்கும்."
* காங்கிரஸ் ஏன் 63 தொகுதிகள் கேட்டங்களாம்...?" "ஜெ தான் கூட்டுத்தொகை 9 வரமாதிரி கேட்கச் சொன்னாங்களாம்."
ராமதாஸ் தனக்கு ஒதுக்கிய தொகுதியில் இருந்து ஒரு தொகுதியை எப்படி விட்டுக் கொடுத்தார்." "ஒரு ராஜ்ய சபா உறுப்பினர் கேட்டாப்போல மேலவைல ஒரு சீட் அவர் சொல்றவருக்குத் தரதா கலைஞர் சொல்லி இருப்பார்."
நாட்டுல எவ்வளவு ஜாதிகள் இருக்கு..." "ஒரு சீட், இரண்டு சீட் வாங்கின கட்சியெல்லாம் லிஸ்ட் எடுத்துப் பார்.. தெரிஞ்சிடும்.
சீசன் ஜோக்ஸ் கொஞ்சம் சிரிசிடுங்கள் !!!

மேனேஜர் ஏன்? லேட்டு என்று அவரிடம் விசாரித்தார். அதற்க்கு அவர் சார் நம்ம "ஆபீஸ் தெரு முனைல" ஒரு பெரிய பள்ளம் இருக்குத்தில்லையா? ஆமாம் பார்த்தேன்! நான் பார்கள சார்!!
மாலை டைம்!! சிரியுங்கள் !!!

வேலைக்காரர்: எஜமானி அம்மாவிடம் சொன்னார் இன்னையோட நான் வேலையை விட்டு நிக்கபோறேன்மா என்று!
எஜமானி அம்மா: ஏன்? என்ன? ஆச்சு !
வேலைக்காரர்: அதை ஏன்மா கேட்கிறீங்க! அய்யா ஜபமாலை வாங்க சொன்னாரு! நானும் வாங்கிவந்தேன். உடனே அதை பூஜை அறைக்கு எடுத்துக்கொண்டு போய் எண்ண ஆரம்பிச்சிட்டாரு! நான் என்ன பொய்யா சொல்லபோறேன். திரும்பிவந்து சரியா இருக்கு என்று சொல்கிறார்.
சட்டம் ஒரு இருட்டறை! சிரியுங்கள்!

*பசிக்காக திருடுபவனுக்கு இருட்டறையில் சிறை! 176 லட்சம் கோடி திருடுபவனுக்கு ஏசி அறையில் சிறை! அதபோல் விபத்து என்று கமிஷன் சொல்லும் நபர்களுக்கு தூக்கு 5000 க்கும் அதிகமான அப்பாவி மக்களை கொன்றவர்களை பல்லாக்கில் தூக்கு! சட்டம் ஒரு இருட்டறை மட்டும்மல்ல சிரிப்பரையும் கூட (காவி அறையும் கூட). சிரியுங்கள்!!! சிந்தியுங்கள்!!
சீசன் ஜோக்ஸ் !!!

வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்!!!

அவங்க EB க்கு போன் பண்ணுவாங்க !
ஜப்பானில் Power Cut ஆன,
அவங்க Fuse போயிருக்கா ! அப்படின்னு செக் பண்ணுவாங்க !
-ஆனால்
இந்தியாவில் Power Cut ஆன,
என்ன பண்ணுவாங்கன்னு தெரியுமா?
முதல்ல பக்கத்து வீட்டை
செக் பண்ணுவாங்க !
காதலர்கள் டைம் ப்ளீஸ் சிரியுங்கள் !!!

* காதலி: "நாம எப்பவும் சண்டை போடாம சந்தோஷமா ஒத்துமையா இருக்கணும்..." காதலன்: அப்ப... கல்யாணம்... செய்துக்க வேண்டாம்ங்கிறே! உன் விருப்பம்!"
* மாலா இன்னிக்கு மட்டும் என்னோடு பீச்சுக்கு வா.... உன்னைத் தொடமாட்டேன். கமெண்ட் அடிக்க மாட்டேன். சில்மிஷம் பண்ணமாட்டேன்" "அப்புறம் பீச்சுக்கு எதுக்கு?"
* வாழ்க்கையில சில விஷயங்கள் நடக்காமல் இருந்தால் நல்லா இருக்கும்!" "நாம காதலிச்சதைச் சொல்றேளா?" இல்லே! நம்ம கலியாணம் நடக்கப் போறதைச் சொல்றேன்!"
* மூணு மாசமா பின்னாடி சுத்தறானே... இவன் காதலை ஏத்துக்கலாமா, கூடாதான்னு நீ குழம்பறது ஹார்ட்டுக்கு கெடுதலாம்... ஹெல்த்தியா இருக்கறதுக்காகவாவது என்னோட காதலை ஏத்துக்க ரம்பா ப்ளீஸ்...."
வட்டார ஜோக்ஸ் !!!

சீசன் ஜோக்ஸ் !!!

பஞ்ச் டயலாக் !!!

சீசன் ஜோக்ஸ் !!!

என்னா? நடந்தது நண்பா! எதிர் வீட்டு அய்யாசாமி கூட ஓடி போய்விட்டாள். ஹா !! ஹா!

ஒரு பெண்! நாயகன் சினிமாவில் வருவது போல் என்னை காப்பாத்துங்கள்! என் தாலிக்கு ஆபத்து! என் தாலிக்கு ஆபத்து!! என்று அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்தாள்!! அங்கு நின்றவர்கள் என்னமா? உன் கணவருக்கு என்னா ஆச்சு! என்று விசாரித்தார்கள். அதற்கு அந்த அம்மா! என் கணவர் குடித்துவிட்டு என் தாலியை பரிபதற்கு துரத்திக்கொண்டு வருகிறார். அங்கு நின்றவர்கள் அட இதுதானா!! நாங்கள் எதோ உன் கணவருக்கு எதோ ஆச்சோ என்று.!!! ஹா! ஹா!!
வரலாற்றில் ஒரு ஏடூ!!

ஒரு நண்பன் ஒரு முதியவரிடம் அய்யா ! ஒரு சந்தேகம்? என்ன உன் சந்தேகம் பகுத்தறிவு என்றால் என்ன? விதி என்றால் என்ன ? அப்படியா ! சரி உன் வலது காளை தூக்கு என்றார் அவனும் வலது காளை தூக்கினான். இப்போ வலது காளை இறக்காமல் இடது காளை தூக்கு என்றார் அவனும் தூக்கினான் ஆனால் பொத்து என்று கிழே விழுந்துவிட்டான். அப்பொழுது அந்த முதியவர் சொன்னார் உன்னால் ஒரு காளை தூக்க முடிந்தது. அதுதான் பகுத்தறிவு இரண்டு காளையும் ஒரே சமையத்தில் தூக்கினாய் அடிபட்டது அது தான் விதி.
அவனும் விதிய நினைத்துகொண்டே இடுப்பை பிடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்.!!! ஹா !! ஹா !!!
கலவை பாதி!! பயணம் பாதி!! கலந்த செய்த ஜோக்ஸ் நான்!!! சிரியுங்கள் ப்ளீஸ்!!!

ராசா டைம் !!!

* வாத்தியார் மாணவனிடம் தஞ்சாவூரை ஆண்ட பழைய ராஜாவின் பெயர் தெரியுமா? தெரியாது சார் !சரி மதுரையை ஆண்ட பழைய ராஜாவின் பெயர் தெரியுமா ? தெரியாது சார் எனக்கு தெரிந்த ஒரே ராஜா ஸ்பெக்ட்ரம் ராசா சார் !! ஹா! ஹா !!
*"மன்னர் அந்த ஆளுக்கு பத்துக் கசையடிகள் கொடுக்கச் சொல்கிறாரே, ஏன்?" "ராஜா என்று அழைப்பதற்கு பதிலாக 'ராசா' என்று சொல்லிக் கேவலப்படுத்தி விட்டாராம்!"
*"தலைவர் அப்பாவி மாதிரி நடிக்கிறாரே..?" "ஆமாம்! ஸ்பெக்ட்ரம்னா என்னன்னு கேட்கிறாரே?"
*"தலைவரே! 'அந்த 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி ஊழல்'னு மேடையில திட்டிப் பேசினீங்களே... அது 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி!" "இவ்வளவு நாளைக்கு வட்டி போட்டுக் கூட்டிப் பாரு கணக்கு சரியா வரும்!"
*'மரியாதை நிமித்தமா என்னைச் சந்திக்க வந்தாங்க'னு ராசா சொல்றதை என்னால் நம்ப முடியலை!" "யாரை அப்படிச் சொல்றாரு?" "சி.பி.ஐ அதிகாரிகளைத்தான்!"
*"அந்த குடிகாரன் ரொம்ப அப்பாவியா இருக்கானே!" "டாஸ்மாக்குல போயி புதுசா வந்திருக்கிற 'ஸ்பெக்ட்-ரம் இருக்கான்னு கேக்கறானே!"
*அரசியல்லயும் 'ராகிங்'கா என்னய்யா சொல்றே..?" "புதுசா கட்சி தொடங்கின தலைவரைப் பார்த்து ஆ.ராசா மாதிரி நடந்து காட்டச் சொன்னாங்களாம்!"
*நமது ராஜா ரொம்பவும் வருத்தத்தில் இருக்கிறாரே ஏன்?" "ராசாவா.... பிறக்கவில்லையே என்கிற வருத்தம்தான்!"
சீசன் ஜோக்ஸ் !!!

Feb 1, 2011
வட்டார ஜோக்ஸ் ! சும்மா சிரிச்சி வையுங்கள்!!

அதே இரு நண்பர்களும் இண்டர்விவ் முடிந்து அன்று இரவில் ஒரு விடுதியல் தங்கிவிட்டு அதிகாலை ஜன்னல் ஓரமாக எட்டிபார்தார்கள் பக்கத்தில் கட்டுமான வேலை நடந்துகொண்டு இருந்தது அதில் இரு கொத்தனார்கள் ஹிந்தில் பேசிகொண்டு இருந்தார்கள் அவர்கள் உடனே
தலையில் அடித்துக்கொண்டு கொத்தனார்க்கு கூட ஹிந்தி தெரியுது நமக்கு தெரியலை என்று கூறிக்கொண்டனர்.(ஆனால் கொத்தார் அந்தவூர் வாசி என்று அவர்களுக்கு புரியாமல் போனது ) ஹா ! ஹா !!
சீசன் ஜோக்ஸ் !!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக